அம்மனுக்கு காணிக்கையாக வந்த 10 பவுன் நகை… நைசாக திருடி பாக்கெட்டில் போட்ட அதிகாரி ; ஷாக் வீடியோ..!!!

Author: Babu Lakshmanan
9 November 2023, 1:32 pm

கோவில் உண்டியலில் வந்த தங்க நகையை கோவில் அதிகாரியே திருடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில். இந்த கோவிலுக்கு சினிமா பிரபலங்கள், அரசியல்வாதிகள், இஸ்ரோ விஞ்ஞானி சிவம் உட்பட பலரும் வந்து செல்வார்கள். இவ்வளவு பிரசித்தி பெற்ற கோவிலில் இன்று உண்டியல் திறந்து அதிலுள்ள தங்கம், வெள்ளி மற்றும் பணம் எண்ணும் பணி நடைபெற்றது.

அப்போது, கோயில் உதவி ஆணையர் வில்வமூர்த்தி என்பவர் உண்டியலில் காணிக்கையாக செலுத்தியிருந்த பத்து பவுன் தங்க நகையை நைசாக திருடி, தனது பேண்ட் பாக்கெட்டில் வைப்பது சிசிடிவி காட்சிகள் மூலம் தெரியவந்துள்ளது. கோவில் கட்டுப்பாட்டு அறையில் இருந்த பாதுகாப்பு அலுவலர் அதை பார்த்து, அதிகாரியிடம் புகார் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இது குறித்து கோவில் காவல் ஆய்வாளர் தலைமையில் மானாமதுரை காவல் நிலையத்தில் உதவி ஆணையர் மீது திருட்டு தொடர்பாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. திருட்டு நடைபெற்றது மதியம் 2 மணி அளவில், ஆனால் புகார் அளிக்கப்பட்டதோ இரவு ஆகும். மேலும் உண்டியல் என்னும் பணி youtube மூலம் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. அந்த திருட்டு நடந்த நேரத்தில் ஒளிபரப்பு தடை செய்யப்பட்டுள்ளது. அதனால், அனைவருக்கும் இதில் தொடர்பு இருக்கலாம் என்று பொதுமக்கள் கருதுகின்றனர்.

கு

பிரசித்தி பெற்ற மடப்புரம் கோயிலில் மக்கள் ஒரு ரூபாய் கீழே கிடந்தால் கூட காளிக்கு பயந்து கொண்டு அந்த பணத்தை எடுக்க யோசிப்பார்கள். ஆனால், ஆணையரே தங்க நகை திருடிய சம்பவம் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

https://player.vimeo.com/video/882788857?badge=0&autopause=0&quality_selector=1&player_id=0&app_id=58479
  • what is the problem on sikandar salman khan asks people படத்துல என்ன பிரச்சனை, உங்க கருத்தை சொல்லுங்க- பப்ளிக்கை நேரடியாக சந்தித்த சல்மான் கான்!