சாதி ரீதியான பிரச்சனையை தூண்டி விடுவதே திமுக தான் ; வேங்கை வயல் விவகாரத்தை பேசாமல் சிபிஐ-யிடம் ஒப்படையுங்க : கிருஷ்ணசாமி !

Author: Babu Lakshmanan
9 November 2023, 3:38 pm

சமீபத்தில் நடக்கும் சாதி ரீதியான தாக்குதல்கள் குறிவைத்து நடப்பது போல் உள்ளதாகவும், இந்த சாதி ரீதியான தாக்குதல்களை தடுக்க தவறிய காவல்துறை முற்றிலும் தோற்றுவிட்டதாக புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள புதிய தமிழகம் அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, அவர் பேசியதாவது :- தீபத்திருநாள் அன்று அனைவரின் கஷ்டங்கள் நோய் நொடிகள் அகன்று மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். எனது தீப ஒளி வாழ்த்துகளை அனைவருக்கும் தெரிவிக்கின்றேன்.

தென் தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக சாதி ரீதியாக மற்றும் சமுதாய ரீதியான சம்பவங்கள் பல நடைபெற்ற வருகிறது. திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம் போன்ற பகுதிகளில் கடந்த மூன்று மாதங்கள் மட்டும் 30க்கும் மேற்பட்ட சம்பவங்கள் நடைபெற்றுள்ளது.

ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தின் மக்களின் மீது ஒரு குறிப்பிட்ட சமுதாய மக்கள் தாக்குதல் நடத்துகின்றனர். இது குறிவைத்து தாக்குதல் நடத்துவது போல் இருக்கிறது. தவறினை தட்டி கேட்காத தமிழக காவல்துறை முழுவதும் தோற்றுவிட்டது. காவல்துறையினர் தனது பணிகளை சரியாக செய்யவில்லை பணிகளை செய்யாமல் காவல்துறை அலுவலகங்களில் கட்டப்பஞ்சாயத்து தான் நடைபெறுகிறது.

தென் மண்டல பகுதிகளில் உள்ள காவல் துறையினரை பணியில் இருந்து நீக்கி புதிய காவல் அதிகாரிகளை பணி அமர்த்த வேண்டும்,ஒரு காவல் நிலையத்தில் ஒரே சாதியினர் 30 பேர் உள்ளனர். இந்த சாதி மோதல்களை கட்டுப்படுத்த இந்த மாதம் நெல்லையில் 18 தேதி பெரிய பேரணி புதிய தமிழகம் கட்சியின் சார்பில் நடைபெற உள்ளது.

அதிமுக ஆட்சியில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கடந்த 2020 வரை எந்த வகையான சாதி மோதல்களும் நடைபெறவில்லை. இந்த திமுக ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து தான் இது போன்ற மோதல்கள் நடைபெறுகிறது. நாங்கள் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நினைக்கிறேன். இல்லையென்றால் போராட்டத்தை கையில் எடுப்போம். திருச்சி, திருநெல்வேலி மற்றும் மதுரையில் உள்ள சிறை சாலையில் கூட சாதி ரீதியாக சிறையில் அடக்குமுறைகள் நடைபெறுகிறது.

சமூகநீதி பேசக்கூடிய திமுக அரசு சமூக நீதியை வாய் வழியாக மட்டுமே பேசுகிறார்கள், நடைமுறையில் காட்டவில்லை. 150000 காவலர்கள் இருந்தும் கூட சாதி ஈரித்யான மோதல்களை தடுக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை. நடிகர் கமல்ஹாசனுக்கு நான் பிறந்த நாள் தெரிவிக்கவில்லை, என்னை மன்னிக்கவும் மாமன்னன் திரைப்படத்தில் கூட சாதிரீயாக பேசப்பட்டுள்ளது. தமிழ் மக்கள் மீது வேறுபாடுகளை அதிகப்படுத்த கூடிய வகையில், சாதி ரீதியாக மோதல்களை உயர்த்தும்படி, அல்லது ஒரு குறிப்பிட்ட சாதியினரை உயர்த்தி தாழ்த்தி படத்தினை பெயரையும் வசனம் வைப்பது தவிர்க்க வேண்டும்.

கமல்ஹாசனுக்கு சண்டியர் என சாதி ரீதியாக படத்திற்கு பெயர் வைத்திருந்த போதே கண்டனம் செலுத்திருந்தோம். ஆனால், இப்போது நாயக்கர் என்று தக் லைப் படத்தில் கூறியுள்ளார். சாதி ரீதியாகவோ, அல்லது மக்களை சாதி ரீதியாகவோ பிளவுபடுத்தும் எந்த செயலையும் செய்ய வேண்டாம் என வலியுறுத்துகிறோம். இதை மீறினால் சென்சார் போர்டில் புகார் அளிப்போம். வேங்கை வையல் விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க முடியவில்லை என்றால், தமிழக அரசு இந்த விவகாரத்தை சிபிஐக்கு கொடுத்து விடுங்கள்.

சாதி ரீதியாக நடைபெறும் அனைத்து சம்பவங்களுக்கும் ஆளுங்கட்சி தான் காரணம் என ஒரு அச்சம் நிலவுகிறது. திமுகவினர் பேசுவதற்கும், செய்வதற்கும் அதிகமான வித்தியாசங்கள் உள்ளது. அவர்கள் சமூக நீதி என பேசுவதில், எதையும் செயலில் செய்வதில்லை. டி.எஸ்.பி மற்றும் எஸ்.பி போன்ற காவலர்கள் நடவடிக்கை எடுத்தாலும் ஆளும் கட்சி நடவடிக்கை எடுக்க விடாமல் தடுக்கின்றது, என தெரிவித்துள்ளார்.

  • A man fraud in the name of Sunny Leone சன்னி லியோன் பெயரில் இப்படி ஒரு மோசடியா? அதிர்ந்த அரசு!
  • Views: - 553

    0

    0