“நான் செஞ்ச தவறை நானே சரி பண்றேன்” பிரதீப் விஷயத்தில் அதிரடி முடிவு எடுத்த கமல்!

Author: Shree
10 November 2023, 4:09 pm

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் ரியாலிட்டி ஷோ தமிழில் இதுவரை 6 சீசன்கள் முடிந்துள்ளது கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்நிகழ்ச்சிக்கு பெருவாரியான ரசிகர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, 7வது சீசன் பரபரப்பாக சென்றுக்கொண்டிருக்கிறது.

இதனிடையே, கடந்த வாரம் பிக் பாஸ் சீசன் 2 ரெட் கார்ட் மூலமாக பிரதீப் வெளியேற்றப்பட்டது குறித்து சமூக வலைதளங்களில் பெரும் விவாத பொருளாக மாறி உள்ளது. பிரதீப் தரப்பு நியாயத்தை தெரிவிக்க கமல் ஏன் அனுமதிக்கவில்லை என்று பொதுமக்கள் பலரும் சமூக வலைதளங்களில் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள்.

மேலும் கமல் ஹாசன் பிரதீப்பிற்கு ரெட் கார்ட் கொடுப்பதற்கு தகுதியே இல்லை என பலர் கூறி வருகின்றனர். இந்நிலையில் நான் செஞ்ச தவறை நானே சரி பண்றேன் என்ற எண்ணத்தில் கமல் ஹாசன் மீண்டும் பிரதீப் ரங்கநாதனை பிக்பாஸ் வீட்டில் போட்டியாளராக பங்கேற்க வைக்கப்போவதாக செய்திகள் வெளிவந்துள்ளது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • first day collection of Ajith's Good Bad Ugly Movie தல சுற்ற வைக்கும் GBU முதல் நாள் வசூல் வேட்டை… எவ்வளவு கலெக்ஷன் தெரியுமா?