பைக்கில் பணம் வைத்திருந்த வாகன ஓட்டி… கண்ணிமைக்கும் நேரத்தில் ரூ.2.60 லட்சம் களவு : அதிர்ச்சி காட்சி!!!

Author: Udayachandran RadhaKrishnan
10 November 2023, 8:47 pm

பைக்கில் பணம் வைத்திருந்த வாகன ஓட்டி… கண்ணிமைக்கும் நேரத்தில் ரூ.2.60 லட்சம் களவு : அதிர்ச்சி காட்சி!!!

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த பிள்ளைப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் அருள்பிரகாஷ். இந்தப் பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளுக்கு டீ மற்றும் உணவுகளை சப்ளை செய்து வருகிறார்.

இன்று மாலை ஸ்ரீபெரும்புதூர் தேரடி வீதியில் உள்ள கனரா வங்கிக்கு சென்று ரூபாய் 2,60,000 ஆயிரம் ரூபாய் பணத்தை வித்ராவல் செய்துகொண்டு ஸ்கூட்டி வண்டியின் சீட்டுக்கு கீழே வைத்து பூட்டிவிட்டு தன்னுடைய நண்பர்களை சந்திக்க வட்டாட்சியர் அலுவலகம் சென்று வண்டி நிறுத்திவிட்டு நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார்.

பின்னர் வண்டியை எடுக்க முயலும் போது பின் சீட்டின் லாக்கர் உடைந்து கீழே கிடந்ததை பார்த்து பயந்து போய் சீட்டை தூக்கி பார்க்கும் போது அதில் வைத்து இருந்த இரண்டு லட்சத்தி 60 ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளை போனது கண்டு அதிச்சியுற்றார்.

அக்கம் பக்கத்தில் பார்க்கும்போது யாரும் தென்படாததால் உடனடியாக காவல் நிலையத்தில் சென்று புகார் அளித்தார். அந்தப் புகாரை தொடர்ந்து விரைந்து வந்த தாலுகா காவல்துறையினர் வட்டாட்சியர் அலுவலகத்தில் சுற்றி கொண்டிருந்த சிலரை பிடித்து விசாரணை செய்ததில் பணத்தைக் கொள்ளையடித்த நபர் யாரும் கண்ணில் தென்படவில்லை.

பின்னர் அந்தப் பகுதிகளில் இருக்கும் கண்காணிப்பு கேமராக்களை ஸ்ரீபெரும்புதூர் காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.

அதிக மக்கள் நடமாட்டம் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில் பைக்கை நிறுத்தி விட்டு சென்ற சில நிமிடங்களிலேயே லாக்கரை உடைத்து அதிலிருந்த இரண்டு லட்சத்தி 60 ஆயிரம் ரூபாய் பணத்தை கொள்ளை அடித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.

  • Allu Arjun press meet emotional statement நானும் ஒரு குழந்தைக்கு அப்பா தான்..கண்ணீரோடு பேட்டியளித்த அல்லு அர்ஜுன்..!
  • Views: - 289

    0

    0