பட்லர் சொன்ன அந்த ஒரு வார்த்தை… போட்டி தொடங்குவதற்கு முன்பே தகர்ந்தது பாகிஸ்தானின் கனவு..!!!

Author: Babu Lakshmanan
11 November 2023, 2:41 pm

நடப்பு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து பாகிஸ்தான் அணி வெளியேறியது.

நடப்பு 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இந்தியா, தென்னாப்ரிக்கா, ஆஸ்திரேலியா அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்று விட்டன. 4வது இடத்திற்கு நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே போட்டி நிலவியது.

இதில் கடந்த சில போட்டிகளின் முடிவுகளால் நியூசிலாந்து அணிக்கே 99 சதவீத வாய்ப்புகள் இருந்தது. ஏதேனும் அதிர்ஷ்டம் நிகழ்ந்தால் பாகிஸ்தான் அல்லது ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு அரையிறுதி வாய்ப்பு என்றிருந்தது.
தென்னாப்ரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் தோல்வியடைந்ததால் அந்த அணி உலகக்கோப்பை தொடரில் இருந்து வெளியேறியது.

அதேவேளையில், இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு சற்று சவால் நிறைந்ததாகும். அதாவது, 300 ரன்களை இலக்காக நிர்ணயித்தால் இங்கிலாந்தை 13 ரன்களுக்கும், 400 ரன்களை இலக்காக நிர்ணயித்தால் 122 ரன்களுக்குள்ளும் சுருட்ட வேண்டும். மாறாக இங்கிலாந்து அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தால் அந்த அணி நிர்ணயிக்கும் இலக்கை 3 ஓவர்களுக்குள் அடிக்க வேண்டும் என்ற சவால் இருந்தது.

இந்த நிழலில், பாகிஸ்தான் டாஸ் ஜெயித்து பேட் செய்தால் மட்டுமே, அரையிறுதியை ஒரு சதவீதமாவது நினைத்து பார்க்க முடியும் என்றிருந்தது. அப்படியிருக்கையில், இங்கிலாந்து அணியின் கேப்டன் பட்லர், டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனால், ஒருவேளை இங்கிலாந்து அணி 100 ரன்னுக்கு ஆட்டமிழந்தால் அதனை 2.5 ஓவர்களிலும், 200 ரன்னுக்கு ஆட்டமிழந்தால் அதனை 4.3 ஓவர்களுக்குள்ளும், 300 ரன்னுக்கு ஆட்டமிழந்தால் அதனை 6.1 ஓவர்களில் சேஸ் செய்ய வேண்டும். ஆனால், இது எதுவும் முடியாத காரியம்.

எனவே, பாகிஸ்தான் அணி அரையிறுதி வாய்ப்பை முற்றிலுமாக இழந்து விட்டது.

  • I loved My fans Uncondtionally Says Ajith kumar UNCONDITIONAL LOVE… கார் பந்தயத்திற்கு இடையே பேசிய அஜித் : சிலாகித்த ரசிகர்கள்! (வீடியோ)
  • Views: - 598

    0

    0