ஆள விடுடா சாமி… வெங்கட் பிரபு வச்ச பார்ட்டியில் கலந்துக்கொள்ளாத விஜய் – விஷயம் இது தான்!
Author: Shree11 November 2023, 5:32 pm
தமிழ் சினிமாவின் கமர்சியல் ஹீரோவான விஜய் கடைசியாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படத்தில் நடித்திருந்தார். அந்த திரைப்படம் அக்டோபர் 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி தற்போது வரை வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
அதனை தொடர்ந்து அடுத்ததாக தளபதி 68 படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தை பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கவுள்ளார் . அண்மையில் இப்படத்தின் பூஜை பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் பல நட்சத்திர பிரபலங்கள் நடிக்க உள்ளனர்.
குறிப்பாக பிரஷாந்த், மோகன், பிரபு தேவா, லைலா, சினேகா, மீனாட்சி சவுத்ரி என பல நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள். இதன் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தாய்லாந்தில் நடைபெற உள்ளது.
இந்நிலையில் அண்மையில் தனது பிறந்தநாளை கொண்டாடிய வெங்கட் பிரபு படக்குழுவுடன் சேர்ந்து பார்ட்டி வைத்து கொண்டாடினார். ஆனால், இந்த பார்ட்டியில் விஜய் கலந்துக்கொள்ளவில்லையாம். காரணம் அதில் மது விருந்து இருந்ததால் தான் விஜய் அறவே தவிர்த்துவிட்டாராம்.