என் நண்பனை கொலை செய்துவிட்டேன்.. கைது பண்ணுங்க : மதுபோதையில் காவல்நிலையத்தில் இளைஞர் சரண்!!

Author: Udayachandran RadhaKrishnan
13 November 2023, 10:32 am

என் நண்பனை கொலை செய்துவிட்டேன்.. கைது பண்ணுங்க : மதுபோதையில் காவல்நிலையத்தில் இளைஞர் சரண்!!

காஞ்சிபுரம் அடுத்த ஆரிய பெரும்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் சூர்யா (வயது 26). அதே பகுதியில் உள்ள மெட்ரிக் பள்ளியில் வேன் ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார்.

கடந்த ஐந்து வருடத்துக்கு முன்பு மாற்று சமுதாயத்தை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஆண் பெண் என நான்கு மற்றும் ஐந்து வயதில் இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.

இவர் வீட்டுக்கு எதிர் வீட்டைச் சேர்ந்தவர் கார்த்தி வயது 23. காஞ்சிபுரம் அடுத்த விநாயகபுரம் பகுதியில் கார்த்திக் சொந்தமாக வெல்டிங் கடை நடத்தி வருகிறார் .

இருவரும் அவ்வப்போது இரவு நேரங்களில் ஒன்றாக மது அருந்துவது வழக்கம். அது மட்டுமல்லாமல் சூர்யா அவ்வப்போது கார்த்திக்கை வா மது அருந்தலாம் என அழைப்பதுண்டு.

இதனால் பலமுறை எரிச்சல் அடைந்த கார்த்திக்கும் இதை வெளியே காண்பிக்க முடியாமல் சூர்யாவை அவாய்ட் செய்ய முயற்சித்தார்.

இந்நிலையில் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு திருவிழாவின் போது ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக இருவரும் பேசாமல் இருந்தனர் எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று இரவு சூர்யா கார்த்திக்கை வா மது அருந்தலாம் என அழைத்துள்ளார் . சில நாட்களாக பேசாமல் இருந்த நண்பன் மது அருந்த அழைத்ததால், ஏதாவது வாக்குவாதம் மற்றும் பிரச்சனை ஏற்படும் என்று எண்ணிய கார்த்திக், எதற்கும் இருக்கட்டும் என ஒரு கத்தியை எடுத்து தன்னுடைய வண்டியின் பின்புறம் மறைத்து வைத்துக் கொண்டு ஆரிய பெரும்பாக்கம் வந்து சூர்யாவை தன்னுடைய வண்டியில் ஏற்றிக்கொண்டு அபிராமி நகர் பகுதியில் உள்ள அரசு மதுபான கடையில் இரண்டு பீர் பாட்டில்கள் வாங்கிக்கொண்டு ஆரிய பெரும்பாக்கம் பகுதியில் உள்ள ஏரி கரைக்கு வந்து இருவரும் சேர்ந்து பீர் அருந்தினர்.

நண்பர்கள் இருவரும் சேர்ந்து மது அருந்தி கொண்டிருந்த போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் கோபமடைந்த கார்த்தி தனது இருசக்கர வாகனத்தில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மது போதையில் இருந்த சூர்யாவை நடுமண்டை மற்றும் கழுத்தில் வெட்டி உள்ளார் .

எதிர்பாராத இந்த தாக்குதலால் நிலை குலைந்து போன சூர்யாவின் மண்டையிலிருந்து ரத்தம் பீறிட்டு கிளம்பியது. அதிக ரத்தம் வெளியேறியதால் சூர்யா சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்து போனார்.

அதனைக் கண்டு அதிர்ச்சடைந்த கார்த்திக் வண்டியை எடுத்துக்கொண்டு பாலு செட்டி சத்திரம் காவல் நிலையத்துக்கு வந்து, நண்பன் சூர்யாவை நானே வெட்டி கொன்று விட்டேன் என கூறி சரணடைந்துள்ளார்.

இந்தக் கொலையில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என கார்த்திக்கிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

தீபாவளி தினத்தன்று ஒரே தெருவில் எதிர் எதிர் வீட்டை சேர்ந்த நண்பர்கள் மது போதையில் கொலை குற்றத்தில் ஈடுபட்டது கிராம மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

  • sv shekher shared the test movie poster and criticize it on his x platform என்னைய படத்தில் இருந்து தூக்கிட்டா இதான் கதி- நயன்தாரா படத்திற்கு எஸ்.வி.சேகர் விட்ட சாபம்…