சினிமா பட பாணியில் மாவோயிஸ்டுகள் – போலீசார் இடையே கடும் துப்பாக்கிச்சண்டை : கையெறி குண்டுகள் வீசி தாக்குதல்… கேரளாவில் பதற்றம்..!!
Author: Babu Lakshmanan13 November 2023, 2:03 pm
கேரளாவில் போலீசார் மற்றும் மவோயிஸ்டுகளிடையே நடந்த துப்பாக்கிச்சண்டையால் பதற்றம் நிலவியது.
கேரளாவில் கடந்த சில ஆண்டுகளாகவே மாவோயிஸ்டுகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. எனவே, போலீசாரும் வனப்பகுதிகள் மற்றும் மாநில எல்லை சோதனை சாவடிகளில் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அண்மையில் கோழிக்கோடு மாவட்டம் தலப்புலாவில் உள்ள மவோயிஸ்டுகள் போலீசாருடன் துப்பாக்கிச்சண்டையில் ஈடுபட்டனர். இந்த தாக்குதலுக்கு பிறகு 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும், தப்பியோடிய 3 மாவோயிஸ்டுகளை தேடி வந்தனர்.
இந்த நிலையில், கேரளா – கண்ணூர் அருகே அய்யன்குளம் வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் மற்றும் போலீசார் இடையே கடும் துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது.
போலீசாரை நோக்கி மாவோயிஸ்டுகள் கையெறி குண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. பதிலுக்கு போலீசார் நடத்திய தாக்குதலில் மாவோயிஸ்ட்டுகள் 2 பேர் படுகாயம் அடைந்ததாகக் கூறப்படுகிறது.