தரைத்தளத்தில் ரசாயன கிடங்கு… பற்றிய தீ : அடுக்குமாடி குடியிருப்பில் பரவியதால் கோரம்.. 9 பேர் பலியான சோகம்!!

Author: Udayachandran RadhaKrishnan
13 November 2023, 2:21 pm

தரைத்தளத்தில் ரசாயன கிடங்கு… பற்றிய தீ : அடுக்குமாடி குடியிருப்பில் பரவியதால் கோரம்.. 9 பேர் பலியான சோகம்!!

ஹைதராபாத் நம்பள்ளி பஜார்காட் பகுதியில் இன்று காலை கெமிக்கல் குடோன் ஒன்றில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த குடோனில் ஏராளமான தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

இந்த தீ விபத்தில் தொழிலாளர்கள் சிக்கிக் கொண்ட நிலையில் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியை மேற்கொண்டனர்.

இத் தீ மளமளவென பரவி மேலே இருந்த அடுக்குமாடி குடியிருப்புகளிலும் பரவியது. பெரும் போராட்டத்துக்குப் பின் தீ அணைக்கப்பட்டது.

இத்தீவிபத்தில் சிக்கி இதுவரை 9 பேர் உயிரிழந்தனர். மேலும் 16 பேரை தீயணைப்புத்துறையினர் பலத்த காயங்களுடன் மீட்டனர். இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

  • Kudumbasthan Movie Blockbuster Hit பட்டையை கிளப்பும் குடும்பஸ்தன்…அதுக்குள்ள சின்னத்திரையில்.. வெளியான மாஸ் அறிவிப்பு..!!