பட்டாசு வெடிக்கும் போது விபத்து… 4 வயது சிறுமி உயிரிழப்பு : சற்றும் தாமதிக்காமல் கோர்ட் போட்ட அதிரடி உத்தரவு!!

Author: Udayachandran RadhaKrishnan
13 November 2023, 5:06 pm

பட்டாசு வெடிக்கும் விபத்து… 4 வயது சிறுமி உயிரிழப்பு : சற்றும் தாமதிக்காமல் கோர்ட் போட்ட அதிரடி உத்தரவு!!

நேற்று தீபாவளி கொண்டாடப்பட்ட நிலையில், தமிழகம் முழுவதும் தீபாவளி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தீபாவளி என்றாலே பட்டாசு வெடிப்பது தான் குழந்தைகளின் கொண்டாட்டமாக இருக்கும்.

அந்த வகையில், சென்னையில் பட்டாசு வெடிப்பதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. அதன்படி, சென்னையில் தீபாவளி நாளான நேற்று, உச்சநீதிமன்றம் விதித்த நேர கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்தது தொடர்பாக சென்னையில் மட்டும் 581 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தகவல் அளித்துள்ளது.

பட்டாசு வெடித்து தீக்காயமடைந்த 38 பேர் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில், ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அடுத்த மாம்பாக்கம் பகுதியை சேர்ந்த விக்னேஷ் என்பவர், 4 வயதான தன் அண்ணன் மகள் நவிஷ்கா உடன் பட்டாசு வெடித்தபோது ஏற்பட்ட விபத்தில், நவிஷ்கா உயிரிழந்தார். விக்னேஷ் கை விரல்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில், இதுதொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், அஜாக்கிரதை மரணம் ஏற்படுத்தியதாக விக்னேஷ் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

  • Sarathkumar in The Smile Man நான் UNCLE-ஆ…”தி ஸ்மைல்மேன்”பட விழாவில் ஆவேசம் அடைந்த சரத்குமார்..!
  • Views: - 364

    0

    0