ஓட்டல் பெண் ஊழியர் கூட்டு பாலியல் பலாத்காரம்… வெளியான அதிர்ச்சி வீடியோ… கெஞ்சியும் விடாத கொடூரன்கள் ; நாட்டையே உலுக்கிய சம்பவம்!!
Author: Babu Lakshmanan13 November 2023, 5:53 pm
ஓட்டல் பெண் ஊழியரை 5 பேர் கொண்ட கும்பல் இழுத்துச் சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் செயல்பட்டு வரும் ஓட்டல் ஒன்றில் பெண் ஒருவர் பணியாற்றி வந்தார். அப்போது, வந்த 5 பேர் கொண்ட கும்பல் அந்தப் பெண்ணை கட்டாயப்படுத்தி, அறைக்கு இழுத்துச் சென்று கூட்டு பலாத்காரம் செய்தனர்.
இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்து விசாரித்தனர்.
கடந்த சனிக்கிழமை நடந்த இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்ததாகவும், பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருவதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த ஒரு பெண் உள்பட 5 பேரை கைது செய்துள்ளதாகவும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தனர்.