பட்டாசு வெடிவிபத்தில் உயிரிழந்த 4 வயது சிறுமி… முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்ட திடீர் உத்தரவு!!

Author: Babu Lakshmanan
13 November 2023, 6:23 pm

சென்னை : பட்டாசு வெடிவிபத்தில் உயிரிழந்த 4 வயது சிறுமியின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு சட்டமன்ற தொகுதி, திமிரி ஒன்றியம், மாம்பாக்கம் ஊராட்சியில் தீபாவளியன்று பட்டாசு வெடித்தபோது எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட விபத்தில் சிறுமி நவிஷ்கா (வயது 4) உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.

உயிரிழந்த சிறுமியின் குடும்பத்தினருக்கும் அவருடைய உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு உயிரிழந்த சிறுமியின் குடும்பத்திற்கு 3 லட்சம் ரூபாயும், இவ்விபத்தின்போது பலத்த காயமடைந்த விக்னேஷ் என்பவருக்கு ஒரு லட்சம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன், என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • getti melam serial actor Passed away தூக்கத்திலேயே உயிர் பிரிந்த நடிகர்.. திரையுலகம் அதிர்ச்சி..!!