கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சங்கரய்யா மருத்துவமனையில் அனுமதி : ‘தோழர்களுக்கு சிபிஎம் வேண்டுகோள்!!!

Author: Udayachandran RadhaKrishnan
14 November 2023, 8:29 am

கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சங்கரய்யா மருத்துவமனையில் அனுமதி : தோழர்களுக்கு சிபிஎம் வேண்டுகோள்!!!

கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சங்கரய்யா அவர்கள், 100-வயதை கடந்துள்ள நிலையில், தனது உடல்நலக்குறைவால், கட்சி செயல்பாடுகளில் ஈடுபடாமல் இருந்து வந்தார்.

இந்த நிலையில், சளி மற்றும் காய்ச்சல் காரணமாக ஆக்சிஜன் குறைவு ஏற்பட்டுள்ளதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் அவருக்கு சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சங்கரய்யா அவர்களை கே.பாலகிருஷ்ணன் அவர்கள் நேரில் சந்தித்து நலம் விசாரித்த நிலையில், தொண்டர்கள் யாரும் அவரை சந்திக்க செல்ல வேண்டாம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஎம்) வெளியிட்ட அறிக்கை: இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மூத்த தலைவரான தகைசால் தமிழர், விடுதலைப் போராட்ட வீரர் தோழர் என்.சங்கரய்யா அவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு சளி மற்றும் காய்ச்சல் காரணமாக ஆக்சிஜன் குறைவு ஏற்பட்டுள்ளதால் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அப்பல்லோ மருத்துவமனையின் மருத்துவர்கள் அவருக்கு சீரிய சிகிச்சை அளித்து வருகிறார்கள். அவருடைய உடல்நலம் தேறி அவர் மீண்டும் நலம் பெற்று வர அனைத்து முயற்சிகளும் செய்யப்பட்டு வருகின்ற வேளையில் தோழர்கள் அவரை நேரில் சென்று பார்க்க முயற்சிக்க வேண்டாம் என்றும் கட்சியின் மாநிலக்குழு சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது.

கட்சியின் மாநில செயலாளர் தோழர் கே.பாலகிருஷ்ணன், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் தோழர் ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோர் நேரில் சென்று தோழர் என்.சங்கரய்யா அவர்களை பார்த்ததுடன், மருத்துவர்களையும் சந்தித்து சிகிச்சை தொடர்பாக பேசினர்.

தோழர் சங்கரய்யாவின் மகன் நரசிம்மன் மற்றும் தென்சென்னை மாவட்ட செயலாளர் தோழர் ஆர்.வேல்முருகன் உள்ளிட்ட மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் உடனிருந்து கவனித்து வருகிறார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு சிபிஎம் கட்சி தெரிவித்துள்ளது.

  • dhanush paid 25 lakhs hospital bill for his director illness நிஜமாகவே கர்ணன்தான்!… தன்னை வைத்து இயக்கிய இயக்குனருக்கு மாபெரும் உதவி செய்த தனுஷ்…