பாஜக பிரமுகர் குஷ்பு இலங்கைக்குள் காலடி எடுத்து வைக்கக்கூடாது : விடுதலை புலிகள் ஆதரவாளர்கள் எச்சரிக்கை!!!!

Author: Udayachandran RadhaKrishnan
14 November 2023, 10:19 am

பாஜக பிரமுகர் குஷ்பு இலங்கைக்குள் காலடி எடுத்து வைக்கக்கூடாது : விடுதலை புலிகள் ஆதரவாளர்கள் எச்சரிக்கை!!!!

பல ஆண்டுகளுக்கு முன், தமிழக திரைப்பட கலைஞர்கள் அவ்வப்போது இலங்கை சென்று, கலை நிகழ்ச்சிகள் நடத்துவது வாடிக்கை. கடந்த, 2009ல் விடுதலை புலிகள் அமைப்பு முழுமையாக முடக்கப்பட்ட பின், திரைப்பட கலைஞர்கள் இலங்கை செல்வது படிப்படியாக குறைந்தது. அதற்கு அங்கு நிலவிய குழப்பமான அரசியல் சூழலே காரணம்.

சமீப காலமாக கலை நிகழ்ச்சிகளுக்கு செல்லும் திரைப்பட கலைஞர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஒரு மாதத்துக்கு முன், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், கொழும்பில் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே கலை நிகழ்ச்சி நடத்தினார்.

நடிகை குஷ்பு, வரும், 21ல் யாழ்ப்பாணம் முற்றுவெளி மைதானத்தில் நடக்க உள்ள இசை நிகழ்ச்சியில், பாடகர் ஹரிஹரனுடன் பங்கேற்க உள்ளார்.

ஆனால், இலங்கைக்கு வரக் கூடாது என குஷ்புவுக்கு விடுதலை புலி ஆதரவாளர்கள், சமூக வலைதளங்களில் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

நடிகை குஷ்பு பா.ஜ.,வில் தேசிய பொறுப்பில் உள்ளார். புலி அமைப்பு மீதான தடை நீட்டிப்பு குறித்த கேள்விக்கு, ‘அந்த இயக்கம் தடை செய்யப்பட வேண்டிய ஒன்று தான்’ என, கருத்து கூறினார்.

இதனால், இலங்கையில் உள்ள புலி அமைப்பு ஆதரவாளர்கள் குஷ்புவை எதிர்ப்பாளராக கருதுகின்றனர்.

இந்த இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ள தமிழக நடன கலைஞர்கள், ‘சந்தோஷ் நாராயணன் நிகழ்ச்சிக்கும் இப்படி தான் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனாலும், போலீஸ் அனுமதி மற்றும் பாதுகாப்புடன் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

‘அதே போலவே, குஷ்பு, ஹரிஹரன் ஆகியோர் இணைந்து நடத்தும் ஆடல், பாடல் நிகழ்ச்சியும் சிறப்பாக நடத்தப்படும்’ என்கின்றனர்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 504

    0

    0