இலங்கை சீரழியக் காரணமே ராஜபக்சே சகோதரர்கள் தான்… விதிகளை மீறிய மத்திய வங்கி அதிகாரிகள் ; நீதிமன்ற பரபரப்பு குற்றச்சாட்டு..

Author: Babu Lakshmanan
14 November 2023, 6:51 pm

இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு ராஜபக்சே சகோதரர்களே காரணம் என்று அந்நாட்டு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்று பரவலால் இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. இதற்கு பொறுப்பேற்று பதவி விலகுமாறு இலங்கையில் போராட்டங்கள் வெடித்தன. இதையடுத்து, அதிபர் பதவியை விட்டு கோத்தபய ராஜபக்சே ராஜிநாமா செய்தார். பின்னர், அவர் தாய்லாந்தில் தஞ்சம் புகுந்தார். இதைத் தொடர்ந்து, நடந்த தேர்தலில் எம்.பிக்களின் ஆதரவைப் பெற்று இடைக்கால அதிபர் ரணில் விக்கிரமசிங்க வெற்றி பெற்றார்.

இதனிடையே, தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு காரணமானவர்கள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு கோரி இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் சந்திரா ஜயரத்ன உள்ளிட்டோர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு விசாரணைக்கு வந்த போது, இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு ராஜபக்சே சகோதரர்கள் மற்றும் அப்போதைய வங்கி அதிகாரிகளே காரணம் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர்களான அஜித் நிவார்ட் கப்ரால், பேராசிரியர் டபிள்யூ.டி. லக்ஷ்மன், நிதியமைச்சின் முன்னாள் செயலாளர் எஸ்.ஆர். அடிகல, முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் பி.பி.ஜயசுந்தர மற்றும் இலங்கை மத்திய வங்கியின் நிதிச் சபை உறுப்பினர்கள் ஆகியோர் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

  • jana nayagan shooting finished in may mid and he possibly started political tour in may end முடியப்போகுது படப்பிடிப்பு, இனி அரசியலில் சுறுசுறுப்பு, சுற்றுப்பயணத்திற்கு தயாராகும் விஜய்?