இருட்டு’ல லிப்லாக்.. பாத்ரூம்’ல கொஞ்சல்.. மாயா பூர்ணிமாவை குறித்துபேசிய பிக் பாஸ் போட்டியாளர்..!
Author: Vignesh15 November 2023, 4:31 pm
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் ரியாலிட்டி ஷோ தமிழில் இதுவரை 6 சீசன்கள் முடிந்துள்ளது கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்நிகழ்ச்சிக்கு பெருவாரியான ரசிகர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, 7வது சீசன் பரபரப்பாக சென்றுக்கொண்டிருக்கிறது.
இதனிடையே, திடீரென ரெட் கார்ட் மூலமாக பிரதீப் வெளியேற்றப்பட்டது குறித்து சமூக வலைதளங்களில் பெரும் விவாத பொருளாக மாறியது. பிரதீப் தரப்பு நியாயத்தை தெரிவிக்க கமல் ஏன் அனுமதிக்கவில்லை என்று பொதுமக்கள் பலரும் சமூக வலைதளங்களில் கண்டனங்களை தெரிவித்தனர். மக்கள் பலரும் பரதீப்பிற்கு ஆதரவாக தங்களது கருத்துக்களை ஆழமாக முன்வைத்து வருகின்றனர்.
இப்படியான நேரத்தில் அசிங்கப்படுத்தப்பட்ட அதே இடத்தில் பிரதீப் ஆண்டனி உச்சத்தில் ஜொலிக்கவிருக்கிறார். ஆம், இயக்குனர் ஆகவேண்டும் என்ற கனவோடு இருக்கும் பிரதீப்பிற்கு விஜய் டிவி வெப் தொடர் இயக்கும் வாய்ப்பை கொடுத்துள்ளார்களாம்.
இந்நிலையில், பிக் பாஸ் சீசன் 7 போட்டியாளர்கள் குறித்து பேசிய பிரபல நடிகை மற்றும் பிக் பாஸ் சீசன் 3 போட்டியாளர் கஸ்தூரி, இந்த சீசனில் இருட்டு நேரத்தில் லிப் லாக் கொடுக்கிறது, பாத்ரூமில் கொஞ்சறது இதை எல்லாம் காட்டவில்லை. தனக்கு மாயாவை பற்றி முதலே தெரியும் என்றும், பிரதீப் பண்ண விஷயம் அவரை மட்டும் அசிங்கப்படுத்தவில்லை என்றும், அவருடைய பெற்றோரையும் சேர்த்து தான் அசிங்கப்படுத்தி இருக்கிறது. ஆனால் இந்த விஷயம் பிரதீப்க்கு புரியவில்லை. மாயா தன்னுடைய உள்ளாடையை எடுத்து நிக்சனுக்கு காட்டிட்டு அதை காமெடி என்று சொல்லிவிட்டு சென்று விட்டனர். இதை கமல் தட்டிகேட்கவில்லை என்று கஸ்தூரி தெரிவித்துள்ளார்.