ஆளுநரின் செயல் தமிழக மக்களை காயப்படுத்துகிற அடாவடித்தனமாக போக்கு : திருமாவளவன் கண்டனம்!!

Author: Udayachandran RadhaKrishnan
16 November 2023, 9:52 pm

ஆளுநரின் செயல் தமிழக மக்களை காயப்படுத்துகிற அடாவடித்தனமாக போக்கு : திருமாவளவன் கண்டனம்!!

தமிழக அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பிய 10க்கும் மேற்பட்ட மசோதாக்களுக்கு விளக்கம் கேட்டு திருப்பி அனுப்பியுள்ளார் ஆளுநர் ரவி. நீண்ட காலமாக நிலுவையில் இருந்த மசோதாக்கள் தலைமை செயலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த 10க்கும் மேற்பட்ட சட்ட மசோதாக்களுக்கு விளக்கம் கேட்டு மீண்டும் அரசுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ஆளுநர் திருப்பி அனுப்பிய மசோதாக்களை சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைக்க அரசு முடிவு செய்துள்ளது.

இந்த நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சபாநாயகர் அப்பாவு, சனிக்கிழமை கூடும் அவசர கூட்டத்தொடரில் மசோதாக்கள் மீண்டும் நிறைவேற்றப்படும் மசோதாக்கள் திருத்தம் செய்யாமல், மீண்டும் தாக்கல் செய்ய உள்ளதாக தெரிவித்து இருந்தார்.

இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த விசிக தலைவர் திருமாவளவன் அவர்கள், இது ஒட்டுமொத்த தமிழக மக்களையும் காயப்படுத்துகிற அடாவடி தனமான போக்கு.

ஆளுநரின் இந்த போக்கை விடுதலை சிறுத்தைகள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. இதுதொடர்பாக முதல்வர் அவர்கள் சிறப்பு கூட்டத்தொடரை கூட்டுகிறார். இதனை வரவேற்கிறோம். ஆளுநரை திரும்ப பெற வேண்டும் என்ற தீர்மானத்தை சட்டமன்றத்தில் ஏகமனதாக நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.

  • ajith kumar asking for script to bala but bala did not give Full Script கொடுக்க மாட்டேன்- அஜித்தின் முகத்துக்கு நேராக சொன்ன பிரபல இயக்குனர்…