ஸ்விக்கியில் ஆர்டர் செய்த உணவில் COOL LIP : உணவு சாப்பிட்ட குழந்தைக்கு வாந்தி, பேதி… பிரபல தனியார் உணவகத்துக்கு சிக்கல்!!

Author: Udayachandran RadhaKrishnan
16 November 2023, 9:41 pm

ஸ்விக்கியில் ஆர்டர் செய்த உணவில் COOL LIP : உணவு சாப்பிட்ட குழந்தைக்கு வாந்தி, பேதி… பிரபல தனியார் உணவகத்துக்கு சிக்கல்!!

கோவை கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த ஜாஸ்மின். இவர் தனது வீட்டில் சிலிண்டர் காலியானதால், குழந்தைக்கு உணவு தர இணையத்தில் ஆர்டர் செய்திருக்கின்றார்.

ஜாஸ்மின் குழந்தைக்கு சைவ உணவு தர வேண்டும் என்பதனால், சாய்பாபா காலனி பகுதியில் உள்ள பிரபலமான சைவ உணவகத்தில் பிரபல உணவகமான ஸ்விக்கியில் ஆர்டர் செய்திருக்கின்றார்.

அப்பொழுது காம்போ ஆஃபரில் தயிர் சாதம், சாம்பார் சாதம், காம்போ மீல் மற்றும் பேபி கார்ன், பெப்பர் ஃப்ரை உணவுகளை ஆர்டர் செய்திருக்கின்றார். ஜாஸ்மின், உணவு ஸ்விக்கி உணவு விநியோகம் செய்பவர் மூலம் உணவை பெற்று இருக்கின்றார்.

உணவு டெலிவரி செய்யும் பொழுது அதிலிருந்த பார்சல் பிரித்திருந்திருந்த்தாக கூறியிள்ள ஜாஸ்மின், பசியுடன் இருந்த குழந்தைக்கு, அப்பொழுது அந்த உணவை ஊட்டினார்.

பேபி கார்னை குழந்தைக்கு ஊட்டியபோது, ஜாஸ்மின் கண்களுக்கு வித்தியாசமான ஒரு பொருள் உணவில் இருப்பது தெரிந்தது.பஞ்சு அடைத்த பை போல அது இருந்த அந்த பொருளை உற்று பார்க்கையில், பாப்கானில் இருந்த அந்தப் பொருள், தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களில் ஒன்றான கூல் லிப் என்பது தெரியவந்தது.

கூல் லிப் குட்கா உணவில் இருப்பதைப் பார்க்கும் முன்னர், குழந்தைக்கு பேபி கார்ன் உணவை ஜாஸ்மின் ஊட்டி இருக்கின்றார் . சிறிது நேரத்தில் குழந்தை உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, வயிறு வலி உபாதையுடன் வயிற்றுப்போக்கு ஏற்பட்டிருக்கிறது.

இதுபோன்று உணவுகளை அலட்சியமாக விநியோகம் செய்யும் உணவகங்கள் மீது உணவு பாதுகாப்பு துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்து இருக்கின்ற ஜாஸ்மின், தனக்கு உரிய நியாயம் கிடைக்க வேண்டும் எனவும் இனி இதுபோன்று அலட்சியங்கள் நிகழாத வண்ணம் உணவு பாதுகாப்பு துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருக்கின்றார்.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 457

    0

    0