பெண்களுடன் கார்பா நடனம் ஆடினேனா..? சமூகவலைதளங்களில் வைரலான வீடியோ ; பிரதமர் மோடி வேதனை..!!
Author: Babu Lakshmanan17 November 2023, 7:26 pm
பிரதமர் மோடி பெண்களுடன் கார்பா நடனம் ஆடுவது போன்ற வீடியோ வெளியாகிய நிலையில், இது தொடர்பாக அவர் விளக்கமளித்துள்ளார்.
AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் DeepFake என்ற செயலி டிரெண்டிங்கில் இருந்து வருகிறது. இந்த செயலியின் மூலம் ஒரு புகைப்படத்தையோ அல்லது வீடியோவையோ மார்பிங் செய்து உண்மையான வீடியோ போல சித்தரிக்க முடியும். அதேபோல, ஒருவரின் குரலையும் தேவைக்கேட்ப மாற்றிக்கொள்ளலாம்.
அண்மையில், நடிகைகள் ராஷ்மிகா மந்தனா, கத்ரினா கைஃப், கஜோல் ஆகியோரின் வீடியோக்கள் ஆபாசமாக மார்பிங் செய்யப்பட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதேபோல, பிரதமர் மோடியின் குரலை பயன்படுத்தி, தமிழ் பாடல்கள் பாடிய ஆடியோ சமூக வலைதளங்களி வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக பாஜகவினரும் போலீஸில் புகார் அளித்துள்ளனர்.
இந்த சூழலில், பிரதமர் மோடி, பெண்களோடு சேர்ந்து கார்பா நடனம் ஆடுவது போன்ற DEEPFAKE வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானது.
இது தொடர்பாக, டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மோடி, “நான் கார்பா நடனம் ஆடியது போன்ற ஒரு வீடியோவை சமீபத்தில் பார்த்தேன். இதுபோன்ற போலி வீடியோக்கள் மிகவும் கவலை அளிக்கின்றன. இது குறித்து சாட்ஜிபிடி குழுவினருடன் பேசி, எச்சரித்துள்ளேன். தொழில்நுட்பம் பொறுப்புடன் கையாளப்பட வேண்டும். ஊடகங்கள் இது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்,”என்று கூறினார்.