பொண்டாட்டி புள்ளைய விட்டுட்டு பிரபல நடிகை திருமணம் செய்த வாரிசு நடிகர்.. அதிர்ச்சியில் திரையுலகம்..!
Author: Vignesh18 November 2023, 6:00 pm
பிரபு நடிப்பில் வெளிவந்த சின்னத்தம்பி திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடித்த குஷ்பூ உடன் இவர் காதலில் உள்ளார் என்று கிசுகிசுக்கள் அந்த சமயத்தில் முணுமுணுக்கப்பட்டது.
பிரபு மற்றும் குஷ்பூ காதல் விவகாரம் ஒரு காலத்தில் பெரும் விவாதத்திற்கு உள்ளானது. இந்த படத்தில் நடித்த சமயத்தில் பிரபு குஷ்பு இடையே காதல் மலர்ந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இது தொடர்பாக பேசிய சினிமா விமர்சகர் டாக்டர் காந்தராஜ் பிரபு குஷ்பூவை திருமணம் செய்ததாக நாளிதழ் ஒன்றில் செய்தி வெளிவந்தது. பிரபு குஷ்பூவை திருமணம் செய்ததாக நாளிதழ் ஒன்றில் செய்தி வெளிவந்த அந்த சமயத்தில் இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படம் வெளிவந்தது. ஆனால், அந்த சமயத்தில் பிரபு ஏற்கனவே திருமணம் ஆகி தந்தையாகி விட்டார்.
இந்த தகவல் பிரபு மனைவிக்கும் சிவாஜிக்கும் தெரியவந்த நிலையில், அதன் பிறகு அவர்கள் இந்த விஷயத்தில் தலையிட்டதால் அது அப்படியே மறைந்து போனது என்று காந்தராஜ் தெரிவித்துள்ளார்.