10வது நாளாக நீடிக்கும் சுரங்கத்தில் சிக்கிய 41 ஊழியர்களை மீட்கும் பணி : சுரங்கத்தில் சிக்கியவர்களின் கதி என்ன..? வெளியானது முதல் வீடியோ…!!
Author: Babu Lakshmanan21 November 2023, 12:46 pm
உத்தரகாண்ட்டில் சுரங்கத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி 10வது நாளாக நீடித்துள்ள நிலையில், சுரங்கத்தில் சிக்கியவர்களின் முதல் வீடியோ வெளியாகியுள்ளது.
உத்தரகாண்ட் மாநிலத்தில் சில்க்யாரா – பார்கோட் இடையே சுமார் 4.5 கி.மீ. தொலைவுக்கு சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்தப் பணியில் சுமார் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் ஈடுபட்டு உள்ளனர். கடந்த 12ம் தேதி அதிகாலை மண் சரிவு ஏற்பட்டதில், 41 தொழிலாளர்கள் சுரங்கப் பாதையின் நடுவில் சிக்கிக் கொண்டனர்.
அவர்களை மீட்கும் பணி 10வது நாளாக நீடித்து வருகிறது. 8 அரசு துறைகளை சேர்ந்த நிபுணர்கள் இரவு, பகலாக முயற்சி செய்து வருகின்றனர். தற்போது, இடிபாடுகள் வழியாக செலுத்தப்பட்ட 6 அங்குல குழாய் வழியாக உணவு, குடிநீர் வழங்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், சுரங்கப்பாதை விபத்தில் சிக்கியுள்ளவர்களின் முதல் வீடியோ வெளியானது. இடிபாடுகள் வழியாக செலுத்தப்பட்ட குழாய் வழியாக கேமரா அனுப்பப்பட்டு வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. எண்டோஸ்கோபி கேமரா மூலம் சுரங்கத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்களை வீடியோ எடுத்துள்ளனர்.