ரச்சிதாவை பிரிய இதுதான் காரணம்.. தினேஷ் கூறிய உருக்கமான சம்பவம்..!

Author: Vignesh
22 November 2023, 10:55 am

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் பிக் பாஸ் கொடுத்த டாஸ்கில் நடிகர் தினேஷ் தனது மனைவி ரக்ஷிதாவை பற்றி பேசியுள்ளார். என் திருமண வாழ்க்கையில் ஒரு பெரிய பிரேக் உருவானது. என் மனைவியும் நானும் ஒரு சின்ன சண்டை போட்டு ஈகோ காரணமாக அது பெரிய விஸ்வரூபமாக எடுத்தது. அதை பெரியவர்களால் தீர்த்து வைக்க முடியாமல் இருவருக்கும் பிரிவு ஏற்பட்டது.

தற்போது வரை, இருவரும் பிரிந்து தான் இருக்கிறோம். மேலும், அதிலிருந்து மீண்டு வர முடியாமல் இன்னும் தவித்து வருகிறேன். அந்த பிரிவுக்குப் பிறகு ஒரு வருடமாக என்னை நானே தனிமைப்படுத்திக் கொண்டேன். ரக்ஷிதாவுக்கும் அப்படித்தான் இருந்திருக்கும் அதை எல்லாம் கடந்து தான் வந்திருக்கிறார்கள். மீண்டும் சேர பலமுறை முயற்சி செய்தேன்.

அதில், frustrate ஆகி நின்று விட்டேன். தற்போது, வரும் வேலைகளை எடுத்து செய்து கொண்டிருக்கிறேன். வாழ்க்கை எப்படி போகிறதோ அப்படி போய் கொண்டு இருக்கிறது. இருவருமே ஆர்டிஸ்ட் என்பதால் எனக்கு அவர் அடையாளம் அவருக்கு நான் அடையாளம். ஆனால் தற்போது அதுவே உடைந்து விட்டது. இந்த விஷயத்தில், ரிசல்ட் இன்னும் கிடைக்கவில்லை. கடவுள் அருளால் எல்லாம் நல்லபடி நடக்கும் என நினைக்கிறேன் என்று தினேஷ் உருக்கமாக கூறியுள்ளார்.

  • Divya Bharathi latest photoshoot கவர்ச்சியில் மின்னும் நடிகை திவ்ய பாரதி…வைரலாகும் இன்ஸ்டா பதிவு..!
  • Views: - 305

    0

    0