படிக்க வந்த 15 வயது மாணவியை படுக்கைக்கு அழைத்த 59 வயது மின்வாரிய அதிகாரி : அதிர்ச்சி சம்பவம்!!!
Author: Udayachandran RadhaKrishnan22 November 2023, 12:35 pm
படிக்க வந்த 15 வயது மாணவியை படுக்கைக்கு அழைத்த 59 வயது மின்வாரிய அதிகாரி : அதிர்ச்சி சம்பவம்!!!
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை இ .பி. காலனி பகுதியை சேர்ந்தவர் 59 வயதான கந்தசாமி. இவர் நிலக்கோட்டை மின் வாரிய அலுவலகத்தில் மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார்
இவரது வீட்டில் தனது உறவினரின் 15 வயது மகள் தங்கி படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 18 ஆம் தேதி இரவு கந்தசாமி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாஸ்கரனிடம் சிறுமி புகார் அளித்துள்ளார் .
புகார் குறித்து உரிய விசாரணை நடத்துவதற்கு நிலக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பேபிக்கு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உத்தரவிட்டதன் பெயரில் ஆய்வாளர் பேபி கந்தசாமியின் வீட்டிற்கு நேரடியாக சென்று விசாரணையில் ஈடுபட்டார்.
விசாரணையில் மின்வாரிய மேற்பார்வையாளர் கந்தசாமி போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நிலக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
15 வயது மாணவியை 59 வயது மின்வாரிய மேற்பார்வையாளர் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்று போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட சம்பவம் இப்பகுதியில் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.