எவ்வளவு சொல்லியும் திருந்தாத மாணவர் சமூகம்… ஆபத்தான முறையில் அரசுப் பேருந்தில் பயணம் ; வைரலாகும் ஷாக் வீடியோ!!

Author: Babu Lakshmanan
22 November 2023, 5:13 pm

மதுரை தும்பக்குளம் கிராமப்புறத்தில் இருந்து திருமங்கலம் நோக்கி வந்த அரசு பேருந்தில் பள்ளி மாணவர்கள் ஆபத்தான முறையில் படிக்கட்டில் தொங்கியவாறு பயணித்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள தும்பக்குளம் கிராமத்தில் இருந்து திருமங்கலம் நோக்கி வந்த அரசு பேருந்தில் பள்ளி மாணவர்கள் ஆபத்தான முறையில் பயணம் செய்து வருகின்றனர்.

மதுரை திருமங்கலம் அடுத்துள்ள தும்பக்குளம் கள்ளிக்குடி கல்லுப்பட்டி பேரையூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து திருமங்கலம் டவுன் பகுதிகளுக்கு தினம்தோறும் 100க்கும் மேற்பட்ட அரசு பேருந்துகள் பயணித்து வருகிறது.

இதில் கிராமப்புறத்தில் இருந்து வேலைக்கு செல்பவர்கள் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செல்பவர்கள் அதிக அளவு திருமங்கலம் டவுன் பகுதிகளுக்கு வருகின்றனர். அந்த வகையில் குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டுமே கிராமப்புறங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுவதால் கிராமப்புறத்தில் இருந்து திருமங்கலம் டவுன் பகுதிகளுக்கு வருவதற்கு ஓரிரு பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டு வருவதாலும், இதில் அதிக அளவு பள்ளி மட்டும் கல்லூரி மாணவர்கள் பயணம் செய்து வருகின்றனர்.

இதனால், குறித்த நேரத்திற்கு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளதால் கூட்டணி நெரிசலை பொருட்படுத்தாமலும், ஆபத்தை உணராமல் இதுபோன்ற பேருந்து படிக்கட்டிலும் பேருந்து மீதும் ஏரி பயணம் செய்து வருகின்றனர்.

இதனை உடனடியாக அரசு போக்குவரத்துக் கழகம் நடவடிக்கை எடுத்து அதிக பேருந்துகள் இயக்கப்பட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

பள்ளி மாணவர்கள் படிக்கட்டு மட்டுமின்றி பேருந்து மேற்பகுதிக்கு ஏறி செல்லும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இது போன்று தொடர்ச்சியாக பள்ளி மாணவர்கள் பேருந்தில் அட்டகாசம் செய்யும் வீடியோ அதிக அளவு வெளியாகி வருகிறது. பெரும் அசம்பாவிதம் நடக்கும் முன்பு அரசு தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பிரதான மக்களின் கோரிக்கையாக உள்ளது.

https://player.vimeo.com/video/887221448?badge=0&autopause=0&quality_selector=1&player_id=0&app_id=58479

மதுரை திருமங்கலம் போக்குவரத்து கழக மேலாளரிடம் கேட்டதற்கு அவர்கள் கூறியதாவது :- அரசபட்டி வலையங்குளம் பகுதியில் இருந்து திருமங்கலம் பள்ளிக்கு வரும் மாணவர்கள் படியில் ஆபத்தான முறையில் பயணம் செய்து வந்தனர். அந்த வழித்தடத்தில் பள்ளி நேரங்களில் மூன்று அரசு பேருந்துகளும், இரண்டு தனியார் பேருந்து என ஐந்து பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால் அனைத்து பள்ளி மாணவர்களும் தும்பக்குளம் கிராமத்தில் இருந்து 7:20 க்கு அரசபட்டி கிராமத்திற்கு வரும் பேருந்தில் மொத்தமாக பயணிப்பதால் அரசபட்டி, வலையங்குளம் பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் படியில் அட்டூழியங்கள் செய்து வருகிறது.

இதுகுறித்து படியில் பயணம் செய்த மாணவர்களுக்கு விழிப்புணர்வு செய்யுமாறு இந்த கிராம பஞ்சாயத்து தலைவரிடமும் அவர்கள் பயிலும் பள்ளி தலைமை ஆசிரியரிடமும் அறிவுறுத்த வேண்டும், என திருமங்கலம் போக்குவரத்து கழகம் மேலாளர் தெரிவித்துள்ளார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 462

    0

    0