‘காவி கூடாரமாக மாற்றுவதா..?’ மத்திய பல்கலை.,யில் இந்து முறைப்படி தீபாவளி கொண்டாட்டம்… இந்திய மாணவர் சங்கத்தினர் போராட்டம்…!!!

Author: Babu Lakshmanan
22 November 2023, 10:01 pm

திருவாரூரில் மத்திய பல்கலைக்கழகத்தில் இந்து முறைப்படி தீபாவளி கொண்டாட்டம் நடத்தப்பட்டதற்கு இந்திய மாணவர் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவாரூரில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் கடந்த 17ஆம் தேதி தீபாவளி கொண்டாட்டங்கள் நடைபெற்றுள்ளன. இந்த கொண்டாட்டத்தின் பொழுது ஜெய் ஸ்ரீ ராம் என ஆங்காங்கே வாசகங்கள் எழுதப்பட்டிருப்பதும், மேடைகளில் ஜெய் ஸ்ரீ ராம் என வாசகம் எழுதப்பட்டிருப்பதும், கோலத்தில் ஜெய் ஸ்ரீ ராம் என போடப்பட்டிருந்ததும் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

அதுமட்டுமில்லாமல், புரோகிதர்களை அழைத்து வந்து மந்திரங்கள் சொல்லி பூஜை செய்து தீபாவளி கொண்டாட்டத்திலும் ஈடுபட்டதும், அதில் கல்லூரி துணை வேந்தர் கலந்து கொண்டதும் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இந்த நிலையில், இதற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக திருவாரூர் மாவட்ட இந்திய மாணவர் சங்கத்தின் தலைமையில் பல்கலைக்கழக வளாகத்தின் முன்பு கண்டன ஆர்ப்பாட்டமானது நடைபெற்றது. இதில் சுமார் 80க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். போராட்டம் பல்கலைக்கழக துணைவேந்தரை கண்டித்தும், ஏபிவிபி மாணவர் அமைப்பை கண்டித்தும் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது.

இந்திய மாணவர் சங்கத்தின் திருவாரூர் மாவட்ட செயலாளர் ஆனந்த் தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில் மாநிலத் தலைவர் கோ.அரவிந்தசாமி கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார்.

  • asin is the first choice for vaaranam aayiram movie வாரணம் ஆயிரம் படத்தில் அசின்? இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே!