நூலிழையில் உயிர் தப்பிய நடிகர் சூர்யா.. கங்குவா பட ஷுட்டிங்கில் நடந்த பயங்கரம் ; அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!

Author: Babu Lakshmanan
23 November 2023, 12:54 pm

நூலிழையில் உயிர் தப்பிய நடிகர் சூர்யா.. கங்குவா பட ஷுட்டிங்கில் நடந்த பயங்கரம் ; அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!

இயக்குநர் சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படம் கங்குவா. இந்தப் படத்தை ஸ்டுடியோ க்ரீன், யுவி கிரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது. 3டி முறையில் சரித்திர படமாக உருவாகும் இந்தப் படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி, யோகி பாபு, ஆனந்த் ராஜ், கோவை சரளா உள்பட பல்வேறு நடிகர்கள் நடிக்கின்றனர்.

10 மொழிகளில் தயாராகும் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட்லுக் மற்றும் மோஷன் போஸ்டரை இப்படக்குழு அண்மையில் வெளியிட்டது. இது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை எகிறச் செய்தது.

இந்நிலையில், ‘கங்குவா’ படத்தின் சண்டைக்காட்சிகள் சென்னை ஈ.வி.பி. பிலிம் சிட்டியில் நடைபெற்று வந்த போது, ரோப் கேமரா அறுந்து விழுந்துள்ளது. இதை பார்த்த சுதாரித்துக் கொண்ட சண்டை பயிற்சியாளர்கள் எச்சரித்ததை தொடர்ந்து, நடிகர் சூர்யா அங்கிருந்து விலகினார். இதில், சூர்யாவின் தோள் பட்டையில் லேசான காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக நசரத் பேட்டை போலீசார் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர். சூட்டிங் ஸ்பாட்டில் நடிகர் சூர்யாவுக்கு காயம் ஏற்பட்டிருப்பது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • Vidamuyarchi Thaniye Song மனதை வருடும் ‘தனியே’ பாடல்..அப்போ விடாமுயற்சி காதல் கதையா..கடைசி நேரத்தில் ரசிகர்களுக்கு ட்விஸ்ட்.!