முடிவுக்கு வருகிறதா ரோகித், கோலியின் டி20 வாழ்க்கை..? அழுத்தம் கொடுத்ததா பிசிசிஐ..? வெளியான தகவலால் ரசிகர்கள் அதிர்ச்சி…!!

Author: Babu Lakshmanan
23 November 2023, 2:30 pm

அண்மையில் நடைபெற்ற 50 ஓவர் உலகக்கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்து, கோப்பையை வெல்லும் வாய்ப்பை இழந்தது இந்திய அணி. இந்தத் தொடரில் இந்திய வீரர்கள் விராட் கோலி, ரோகித் ஷர்மா ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

கோப்பையை வெல்லாவிட்டாலும் அவர்களின் தனிப்பட்ட ஆட்டத்திற்கு பாராட்டுக்களும், ஆதரவுகளும் குவிந்து வருகின்றன.

இந்த நிலையில், சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி தொடர்ந்து விளையாடுவது குறித்த அவர்களிடையே பிசிசிஐ விட்டு விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த டி20 உலகக்கோப்பை தொடரின் அரையிறுதியில் இங்கிலாந்து அணியிடம் இந்திய அணி மோசமான தோல்வியை சந்தித்தது. அதன்பின் இந்திய அணியின் சீனியர் வீரர்களான விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவருமே சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடவில்லை.

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் ஷர்மா ஏற்கனவே கடந்த ஓராண்டாக டி20 போட்டிகளில் இருந்து விலகி இருந்து வருகிறார். அவர் கடைசியாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற போட்டியில் விளையாடினார். அதேவேளையில், ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிக்கு ரோகித் ஷர்மா தலைமை வகித்தாலும், ஹர்திக் பாண்டியா தலைமையில் டி20 அணியை உருவாக்கும் முயற்சியில் பிசிசிஐ ஈடுபட்டு வருகிறது.

சீனியர் வீரர்களான சச்சின் டெண்டுல்கர், கங்குலி, டிராவிட், கும்ப்ளே உள்ளிட்ட சீனியர்கள் தானாகவே முன்வந்து டி20 கிரிக்கெட்டில் இருந்து விலகினார்களோ, அதேபோல் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் விலகும் முடிவை எடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

அவர்களின் முடிவு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்படுவதற்கு முன்னதாக இருக்கும் என்று தெரிகிறது.

  • Sarathkumar in The Smile Man நான் UNCLE-ஆ…”தி ஸ்மைல்மேன்”பட விழாவில் ஆவேசம் அடைந்த சரத்குமார்..!
  • Views: - 604

    0

    0