சீரியல் நடிகையின் பயத்தை போக்கிய அஜீத்.. எந்த ஒரு ஹீரோவும் இப்படி ஒரு விஷயத்தை செஞ்சிருக்க மாட்டாங்க..!

Author: Vignesh
23 November 2023, 4:00 pm

இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் வலிமை. சமூகத்தில் நடக்கும் முக்கிய விஷயத்தை எடுத்து இப்படம் பேசப்பட்டிருந்தது. படத்தின் மீது கலவையான விமர்சனங்கள் இருந்தாலும், வலிமை படம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.

ajith-updatenews360

இந்த படத்தில், அஜித் செய்த பைக் ஸ்டண்ட் காட்சிகள் அனைவரையும் மிரள வைத்தது. வலிமை படத்தில் அஜித்துடன் இணைந்து பிரபல சீரியல் நடிகை சைத்ரா ரெட்டி நடித்திருந்தார். முதல் முறையாக இவ்வளவு பெரிய நடிகருடன் நடிக்கிறோம் என பதட்டத்தில் இருந்தாராம். இதனால், அஜித்துடன் நடிக்கும் காட்சிகளில் நடிகை சைத்ரா ரெட்டி நிறைய ரீ டேக்ஸ் வாங்கியுள்ளார்.

ajith-updatenews360

இப்படி ஒரு நிலையில், தான் படத்தில் இருந்து விலகிவிடலாம் என்று கூட நினைத்தாராம். ஆனால், அப்போது சைத்ரா ரெட்டியை அழைத்து நடிகர் அஜித் பேசியுள்ளார். எதனால் பயப்படுறீங்க தப்பா நடித்தால்தான் இனி அடுத்தடுத்து பழகிக்க முடியும். இது எல்லாம் சகஜமான விஷயம் என்று அட்வைஸ் செய்துள்ளார்.

ajith-updatenews360

அதன் பின்னர், நடித்த காட்சியில் நடிகர் அஜித் 4 ரீ டேக்ஸ் வாங்கியுள்ளார். அப்போது, சைத்ரா ரெட்டியிடம் பாருங்கள் நானும் 4 ரீ டேக்ஸ் வாங்கிட்டேன். இதெல்லாம் சகஜமான ஒன்றுதான் என்று தெரிவித்துள்ளார். ஆனால், உண்மையாக நடந்தது என்னவென்றால் நடிகர் அஜித் வேண்டுமென்றுதான் 4 ரீ டேக்ஸ் வாங்கி நடித்துள்ளார். சைத்ரா ரெட்டியின் பயத்தை போக்கத்தான் அஜித் இப்படி எல்லாம் சென்றதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

  • ajith kumar changed the lyrics of god bless u song in good bad ugly அது வேண்டாம் இதை வச்சிக்கோ- இந்த பாடல் வரியை மாற்றியது அஜித்தா?