அடக்க நினைத்தால் அடங்க மறு..  த்ரிஷாவே என்னை மன்னித்துவிடு.. மன்னிப்பு கேட்ட மன்சூர் அலிகான்..!

Author: Vignesh
24 November 2023, 11:30 am

சமீபத்தில் வெளியான வீடியோ ஒன்றில் பத்திரிகையாளரின் கேள்விக்கு பதிலளித்த மன்சூர் அலிகான் நடிகை த்ரிஷா குறித்து மிகவும் அருவருத்தக்க வகையில் பேசியிருந்தார். இந்த பேச்சுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.
மன்சூர் அலிகானின் இந்த பேச்சு குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள த்ரிஷா, இவரை போன்றவர்களால் தான் மனித குலத்துக்கே அவப்பெயர் என்றும், இனி தனது திரை வாழ்க்கையில் அவருடன் இணைந்து நடிக்க மாட்டேன் என்று கூறியிருந்தார். த்ரிஷாவைத் தொடர்ந்து இயக்குநர் லோகேஷ், நடிகை மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் மன்சூர் அலிகானுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

mansoor ali khan -updatenews360

இதுதொடர்பாக மன்சூர் அலிகான் வெளியிட்டுள்ள அறிக்கையில், அடக்க நினைத்தால் அடங்கமறு, இப்ப சொல்றேன் என்னை மன்னித்துவிடு, ஒரு வார காலமாக நடந்த கத்தியின்றி இரத்தமின்றி போரில் நான் வெற்றி பெற்று விட்டேன். எனக்காக வாதிட்ட தலைவர்கள், நடிகர்கள், ஊடகவியலாளர் எல்லோருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள். என்னை எதிர்த்து கண்டித்த மானுடர்களுக்கும் பணிவான வணக்கங்கள். காவல் அதிகாரி அமையார் த்ரிஷாவின் மனது வருத்தப்பட்டு இருக்கிறது என சொல்ல ஐயோ எனக்கும் வருத்தம் தான் என வந்துவிட்டேன். இதுதான் எதார்த்த நிலை என தெரிவித்துள்ளார்.

mansoor ali khan -updatenews360
  • santhanu reply to a fan that comment on vijay sethupathiவிஜய் சேதுபதியை திட்டிய ரசிகருக்கு பதிலடி கொடுத்த சாந்தனு! அப்படி என்னதான் நடந்தது?