இந்த வாரத்தில் இதுதான் முதல் முறை… சற்று ஆறுதல் படுத்திய தங்கம் விலை.. சவரனுக்கு எவ்வளவு குறைவு தெரியுமா…?

Author: Babu Lakshmanan
24 November 2023, 11:57 am

இந்த வாரத்தில் இதுதான் முதல் முறை… சற்று ஆறுதல் படுத்திய தங்கம் விலை.. சவரனுக்கு எவ்வளவு குறைவு தெரியுமா…?

தங்கம் விலையில் நாளுக்கு நாள் ஏற்றம், இறக்கம் காணப்படுவதுண்டு. பெண்களை பொறுத்தவரையில் பெரும்பாலும் தங்களது முதலீடுகளை தங்கத்தில் தான் செலுத்துவதுண்டு. எனவே, தங்கம் விலையில் ஏற்படக்கூடிய மாற்றத்தை பெண்கள் உற்று கவனிப்பதுண்டு.

பங்குசந்தை ஏற்றம் இறக்கம் கண்டால், தங்கம் விலையிலும் மாற்றம் ஏற்படும். ஆனால், கடந்த வாரம் குறைந்து வந்த தங்கம் விலை, இஸ்ரேல் – ஹமாஸ் போர் காரணமாக கிடுகிடுவென உயர்ந்தது.

இந்த வாரத்தின் தொடக்கத்தில் இருந்து ஏறுமுகமாகவே இருந்து வரும் தங்கத்தின் விலை, இன்று சற்று குறைந்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 40 ரூபாய் குறைந்து ரூ.45,880க்கும், ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.5,735-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளியின் விலையில் மாற்றம் இல்லாம் இன்று கிராமும் 79.20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி கிலோ ரூ.79,200-க்கு விற்பனை ஆகிறது.

  • asin is the first choice for vaaranam aayiram movie வாரணம் ஆயிரம் படத்தில் அசின்? இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே!