ட்ரான்ஸ்ஜெண்டர் Operation ரொம்ப கொடுமையா இருந்துச்சு – மரணவேதனையை பகிர்ந்த நமீதா!
Author: Shree25 November 2023, 4:13 pm
பிரபல ட்ரான்ஸ்ஜெண்டர் மாடல் அழகியான நமீதா மாரிமுத்து நாடோடிகள் 2 திரைப்படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார். அதன் பிறகு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்டு தமிழ் சினிஉலகில் தனக்கென ஒரு அடையாளத்தினை பெற்றுள்ளார்.
அவரின் தைரியமும் போல்டான பேச்சும் மக்கள் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. இவர் மிஸ் டிரான்ஸ் ஸ்டார் இன்டர்நேஷனல் போட்டியில் பங்குபெற்ற முதல் இந்தியாவின் திருநங்கை ஆவார். அதனால் அவருக்கு மாடலிங் வாய்ப்புகள் அடுத்தடுத்து கிடைக்க தன்னை கொஞ்சம் கொஞ்சமாக பிரபலமாக்கி கொண்டார்.
இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் தான் திருநங்கையாக மாறிய அனுபவத்தை குறித்து மனம்திறந்து பேசிய நமீதா மாரிமுத்து ” நான் திருநங்கையாக மாற செய்த ஆப்ரேஷன் அனுபவம் மறக்கவே முடியாது. பெங்களூரில் எந்த ஒரு பெசிலிட்டியும் இல்லாத ஒரு சின்ன அறைக்குள் எனக்கு ஆப்ரேஷன் நடந்தது. சர்ஜரி பண்ண வலி, வேதனையோடு 1 மணிநேரத்தில் அங்கிருந்து கிளம்பிடனும். அங்க இருக்க கூடாது. ஆப்ரேஷன் செய்த அடுத்த 40 நாட்கள் மரண வேதனை அனுபவிக்கனும் என நமீதா மாரிமுத்து மிகுந்த வேதனையுடன் பேசியுள்ளார்.