அதிகாலையில் நடந்த கோரமான விபத்து… ஈச்சர் வாகனம் மீது மோதிய கார் : 3 இளைஞர்கள் பலி!!!
Author: Udayachandran RadhaKrishnan26 November 2023, 11:15 am
அதிகாலையில் நடந்த கோரமான விபத்து… ஈச்சர் வாகனம் மீது மோதிய கார் : 3 இளைஞர்கள் பலி!!!
கிருஷ்ணகிரி மாவட்டம் பெங்களூர் – சென்னை தேசிய நெடுஞ்சாலை சூளகிரியை அடுத்த கோனேரிப்பள்ளி என்னுமிடத்தில் முன்னால் சென்றுக்கொண்டிருந்த ஈச்சர் வாகனம் ஒன்று எந்த ஒரு முன் அறிவிப்பு இன்றி சாலையோரமாக உள்ள கடையின் அருகே நிறுத்த முயன்றதாக கூறப்படுகிறது

பின்னர் அதே சாலையில் 5 பேர் பயணித்த கார் ஒன்று எதிர்பாராத விதமாக ஈச்சர் வாகனத்தின் பின்னால் மோதி, கார் பயங்கர விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 3 இளைஞர்கள் பலியாகினர்.மேலும் காரில் இருந்த 2 இளைஞர்கள் பலத்த காயமடைந்தனர்
தகவலை அறிந்த சூளகிரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 2 இளைஞர்கள் பலத்த காயம் ஏற்பட்டு கவலைக்கிடமான உள்ள நிலையில், அவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்..
பின்னர் சம்பவ இடத்தில் காரில் உயிரிழந்த 3 இளைஞர்களின் உடல்களை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
காரில் பயணித்தவர்கள் திருப்பூர் அடுத்த வீரபாண்டி பகுதியை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என சூளகிரி போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
இந்த நிலையில் அதிகாலை சுமார் 5 மணியளவில் தேசிய நெடுஞ்சாலையில் ஏற்ப்பட்ட சாலை விபத்தில் 3 இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் சூளகிரி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது