மக்கள் வாழ்வில் இருள் நீங்கி ஒளி வீசட்டும் : வாழ்த்துச் செய்தியில் ட்விஸ்ட் வைத்த எல்.முருகன்!!
Author: Udayachandran RadhaKrishnan26 November 2023, 5:41 pm
மக்கள் வாழ்வில் இருள் நீங்கி ஒளி வீசட்டும் : வாழ்த்துச் செய்தியில் ட்விஸ்ட் வைத்த எல்.முருகன்!!
தமிழர்களின் பாரம்பரிய பண்பாட்டை பறைசாற்றும் திருவிழாக்களில் கார்த்திகை தீபம் மிக முக்கிய திருநாள். இந்த திருநாளில் மக்கள் வீடுகளில் தீபங்களை ஏற்றி ஏற்றி வழிபாடு நடத்துகின்றனர். கோவில்களிலும் தீபங்கள் ஏற்றியும் சொக்கபனை கொளுத்தியும் வழிபாடு நடக்கின்றன.
உலக புகழ் பெற்ற அண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் ஆலயத்தில் மலை உச்சியில் ஏற்றபப்படும் மகா தீபத்தை காண பல லட்சக்கணக்கானோர் திரள்வர்.
இதுமட்டுமல்லாமல் திருப்பரங்குன்றம் தொடங்கி முருகன் குடியிருக்கும் கோயில்களிலும் தீப வழிபாடு காலம் காலமாக நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் கொண்டாடப்படும் கார்த்திகை தீப வழிபாட்டை சங்ககாலம் இலக்கியங்களிலும் காண முடிகிறது. ‘நலமிகு கார்த்திகை நாட்டவர் இட்ட தலைநாள் விளக்கின்’ என அகநானூறும், குன்றிற் கார்த்திகை விளக்கிட்டன்ன’ என சீவக சிந்தமணியும் குறிப்பிடுகின்றன.
‘தலைநாள் விளக்கிலே’ என கார் நாற்பதும், ‘கார்த்திகை சாற்றில் கழி விளக்குப் போன்றனவை’ என களவழி நாற்பதும் குறிப்பிடுகின்றன. நன்றிணை, மலைபடுகடாம் என மற்ற பல சங்க இலங்கியங்களும் கார்த்திகை தீபத்தை மெச்சி பாடுகின்றன.
அனைவரது வாழ்க்கையிலும் தீமையின் இருள் நீங்கி நன்மையின் ஒளி வீசுவதை குறிக்கவே இந்த திருநாள் கொண்டாடப்படுகிறது. இந்த இனிய நன்னாளில் மக்கள் வாழ்வில் இருள் நீங்கி ஒளி வீசட்டும் என இறைவனை வேண்டி அனைவருக்கும் கார்த்திகை தீப திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் தனது வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.