திமுக வாகன பேரணியில் பரபரப்பு… செய்தியாளர்கள் மீது திமுக நிர்வாகி தாக்கியதால் வாக்குவாதம்!!!

Author: Udayachandran RadhaKrishnan
26 November 2023, 3:36 pm

திமுக வாகன பேரணியில் பரபரப்பு… செய்தியாளர்கள் மீது திமுக நிர்வாகி தாக்கியதால் வாக்குவாதம்!!!

சேலத்தில் வரும் 27ஆம் தேதி திமுக சார்பில் நடைபெற உள்ள இரண்டாவது இளைஞர் அணி மாநாட்டில் இணைவோம் மாநில உரிமை மீட்போம் என்ற தலைப்பில் நடைபெற உள்ள கூட்டத்திற்கும், அதே போல நீட் விலக்கு குறித்தும் இளைஞர் அணி சார்பில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருசக்கர வாகன பேரணி நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் இன்று தர்மபுரி மாவட்டம் அரூரில் நடைபெற்ற இருசக்கர வாகன பேரணியின் போது செய்தியாளர்கள் செய்தி சேகரித்தனர்.

அப்போது திமுக பொறுப்பாளர் ஒருவர் செய்தியாளர்கள் என்று பார்க்காமல் தரை குறைவாக பேசியும் தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் ஒருவரின் நெஞ்சின் மீது கை வைத்து தள்ளியுள்ளார்.
அப்போது செய்தியாளர்களுக்கும் இருசக்கர வாகன பேரணியில் ஈடுபட்ட உறுப்பினர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து அந்த திமுக உறுப்பினர் ஃபார்ச்சூனர் காரில் ஏரி தப்பிச்செல்ல முயற்சித்த போது அவரை பார்த்த செய்தியாளர்கள் அந்த காரை வழிமறித்து, தரை குறைவாக நடந்து கொண்ட அந்த நபர் தங்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் என வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 523

    0

    0