சீரியலில் நடித்துள்ள விஜய் தேவர்கொண்டா… வைரலாகும் அன்சீன் வீடியோ!
Author: Shree26 November 2023, 5:19 pm
தமிழ், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் தேவர்கொண்டா 2011 ஆம் ஆண்டில் ரவி பாபுவின் காதல் நகைச்சுவை திரைப்படமான நுவ்விலா என்ற படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். அதை தொடர்ந்து யெவடே சுப்பிரமணியம் என்ற படத்தில் நடித்ததன் மூலம் நல்ல அடையாளத்தை பெற்றார்.
அதையடுத்து அர்ஜுன் ரெட்டி, மகாநடி , கீத கோவிந்தம் , டாக்ஸிவாலா உள்ளிட்ட அடுத்தடுத்த ஹிட் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக இடத்தை பிடித்தார். குறிப்பாக இளம் பெண்களின் கனவு நாயகனாக வலம் வரத்துவங்கினார்.
கடைசியாக சமந்தாவுக்கு ஜோடியாக குஷி திரைப்படத்தில் நடித்து ஹிட் கொடுத்தார். தற்போது தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவில் ஹேண்ட்ஸம் ஹீரோவாக இருந்து வரும் விஜய் தேவர்கொண்டா சிறுவயதில் சீரியலில் நடித்துள்ளார். அதன் வீடியோ இணையத்தில் வெளியாக ” அட நம்ம விஜய் தேவர்கொண்டாவா இது? என எல்லோரும் வியந்து வீடியோவை ஷேர் செய்து வருகின்றனர்.
https://t.co/bpVfBKXVhK pic.twitter.com/BKSXlPaCJ8
— Hulkeshwara Shastry (@casual_babu) November 23, 2023