மகளை திருமணம் செய்து கொடுக்க மறுத்த தாய் மாமன்… மனவேதனையில் இளைஞர் எடுத்த விபரீத முடிவு!!!
Author: Udayachandran RadhaKrishnan27 November 2023, 9:28 am
மகளை திருமணம் செய்து கொடுக்க மறுத்த தாய் மாமன்… மனவேதனையில் இளைஞர் எடுத்த விபரீத முடிவு!!!
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே காமராஜர் நகர் பகுதியை சேர்ந்த செல்வராஜ் மகன் கலையரசன் (35 வயது) என்பவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில் தனது பாட்டி இறந்த துக்க நிகழ்வில் பங்கேற்று பின் தனது தாய் மாமன் மகளை திருமணம் முடித்து தரக்கூடிய பேசிய நிலையில் இது தொடர்பாக இருவருக்கும் வாக்குவாதம் முத்தி ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதாக கூறப்படுகிறது.
இதனால் விரக்தி அடைந்த கலையரசன் தனது இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
இது தொடர்பாக பொன்னமராவதி காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னமராவதி அரசு மருத்துவமனைக்கு வழக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.