உச்ச நடிகரின் படத்தில் இருந்து விலகிய மஹிமா நம்பியார்.. 4 நாட்களில் படிப்பிடிப்பில் நடந்த கசப்பான அனுபவம்..!!!
Author: Udayachandran RadhaKrishnan27 November 2023, 2:18 pm
உச்ச நடிகரின் படத்தில் இருந்து விலகிய மஹிமா நம்பியார்.. 4 நாட்களில் படிப்பிடிப்பில் நடந்த கசப்பான அனுபவம்..!!!
பல முன்னணி நடிகைகள் திரையுலகில் ஜொலித்தாலும், அளவான கவர்ச்சியுடன் கதைகளை தேர்ந்து நடித்துக்கொண்டிருப்பவர் நடிகை மஹிமா நம்பியார்.
12ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே 2012ம் ஆண்டு வெளியான சாட்டை படத்தின் மூலம் அறிமுகமான அவர், நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
சமீபத்தில் ரத்தம், 800, RDX என படங்களில் நடித்து வரும் அவர், தமிழ் மற்றும் மலையாளத்தில் மட்டுமே நடித்து வருகிறார். இந்த நிலையில் முதன்முறையாக தெலுங்கில் முன்னணி நடிகருக்கு ஜோடி போட வாய்ப்பு கிடைத்தது.

அந்த படத்தில் வெறும் நான்கு நாட்கள்தான் நடித்துள்ளர். சின்ன பிரேக் எடுத்துக் கொண்டுள்ளார் மஹிமா. அப்போது மேனேஜர் ஒருவர் மஹிமாவுக்கு போன் செய்து, உங்களை இந்த படத்தில் இருந்து தூக்கிவிட்டோம், உங்களுக்கு பதில் வேறு கதாநாயகி கமிட்டாகிவிட்டார் என கூறினாராம். இது தனக்கு சினிமா கேரியரில் நடந்த கசப்பான அனுபவம் என மஹிமா பகிர்ந்துள்ளார்.