‘உலகக்கோப்பை ஜெயிச்சது BEST MOMENT கிடையாது… அந்த ஒரு நிமிடம் தான்’ ; இந்திய ரசிகர்களை மீண்டும் வம்புக்கு இழுக்கும் கம்மின்ஸ்..!!

Author: Babu Lakshmanan
27 November 2023, 9:28 pm

50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் சாம்பியன் பட்டத்தை ஆஸ்திரேலியா அணி 6வது முறையாக அண்மையில் கைப்பற்றியது. பைனலில் இந்திய அணியை வீழ்த்தி, பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி மகுடம் சூடியது.

இந்தப் போட்டிக்கு முன்னதாக ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் கொடுத்த பேட்டியில், “இறுதிப் போட்டியை காண சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்திய ரசிகர்கள் நேரில் வருவார்கள். ஆஸ்திரேலிய அணி அவர்களை இந்திய அணிக்கு கோஷமிட முடியாதபடி நிசப்தம் ஆக்கிக் காட்டும். ஒரு லட்சம் மக்கள் நிசப்தமாக ஆக்குவதே எங்களின் இலக்கு,” எனக் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

அவர் கூறியதைப் போலவே, இறுதிப் போட்டியில் இந்திய அணியை திணறடித்து ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்று கோப்பையை வென்றது. குறிப்பாக, சிறப்பாக விளையாடி வந்த கோலியின் விக்கெட்டை கம்மின்ஸ் வீழ்த்திய பிறகு மைதானமே அமைதிக்காடாக மாறியது. இதையடுத்து, கம்மின்ஸ் பேசியதை ஆஸ்திரேலிய ரசிகர்கள் டிரெண்டாக்கி வந்தனர்.

இந்த நிலையில், உங்களின் மரணப்படுக்கையில் BEST MOMENT எதுவாக இருக்கும் என்று நீங்கள் நினைப்பீர்கள் எனக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, இந்திய ரசிர்களை வம்புக்கு இழுக்கும் விதமாக, அவர் பதிலளித்திருப்பது ரசிகர்களை கொதிப்படையச் செய்துள்ளது.

அதாவது, “விராட் கோலி விக்கெட்டுக்கு பின் ஒரு லட்சம் ரசிகர்கள் நிசப்தமாக இருந்த தருணத்தை நினைத்துப் பார்ப்பேன்,” என கூறி இருக்கிறார். கோலியின் விக்கெட்டை வீழ்த்திய பின் மைதானத்தில் அனைத்து வீரர்களும் ஒன்று கூடிய போது, “ஒரு வினாடி ரசிகர்களை கவனியுங்கள்” என ஸ்டீவ் ஸ்மித் கூறினார்.

நாங்கள் ஒரு சில வினாடிகள் அமைதியாக இருந்து ரசிகர்களை கவனித்தோம். ஒரு நூலகத்தில் எப்படி அமைதியாக இருக்குமோ அப்படி இருந்தது அந்த மைதானம்,, எனக் கூறினார். மீண்டும் மீண்டும் இந்திய ரசிகர்களை கம்மின்ஸ் சீண்டி வருவது அனைவரிடத்திலும் ஆத்திரத்தை உண்டாக்கியுள்ளது.

  • Kayadu Lohar Visit Kalahasti Temple Crowd Gathered பவ்யமாக பழத்தை எடுத்து கொடுத்த கயாடு லோஹர்… மொத்தக் கூட்டமும் சுத்தி வந்திருச்சே!