லியோ குறித்து கார்த்தி சொன்ன அந்த வார்த்தை… கொந்தளித்த விஜய் ரசிகர்கள்!!

Author: Udayachandran RadhaKrishnan
28 November 2023, 4:39 pm

லியோ குறித்து கார்த்தி சொன்ன அந்த வார்த்தை… கொந்தளித்த விஜய் ரசிகர்கள்!!

சமீபத்தில் திரைக்கு வந்த வசூல் ரீதியாக மாபெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் லியோ. இயக்குநர் லோகேஷ் என்பதால் படத்திற்கு கூடுதல் பலம். மேலும் லியோ படம் LCUக்குள் வந்ததால் ரசிகர்களுக்கு ஏகப்பட்ட சந்தோஷம்.

தமிழ் சினிமாவை பொறுத்தவரை விஜய் – அஜித் ஆகியோருக்கு ரசிகர்கள் ஏராளம். மேலும் ஏதாவது ஒரு விஷயத்தை விஜய் அல்லது அஜித் மீது நெகட்டிவ்வாக கூறிவிட்டால் பெரிய பஞ்சாயத்தே நடக்கும்.

அப்படித்தான் பிரபல நடிகர் சொன்ன கருத்து விஜய் ரசிகர்களை கொந்தளிக்க வைத்துள்ளது. நடிகர் கார்த்தி சமீபத்தில ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தார்.

அந்த நிகழ்வில் அவரிடம் லியோ படம் பார்த்துவிட்டீர்களா என கேள்வி எழுந்தது. அதற்கு அவர் இன்னும் பார்க்கவில்லை என பதிலளித்துள்ளார்.

இதனால் கடுப்பான விஜய் ரசிகர்கள் நடிகர் கார்த்தி மீது கடும் விமர்சனங்களை வைத்து வருகின்றனர். மேலும் படம் LCUவில் வந்தும், நடிகர் கார்த்தி இப்படி சொல்லிட்டாரே என நெட்டிசன்களும் விமர்சித்து வருகின்றனர்.

  • tvk leader vijay statement on waqf amendment bill இதுதான் பாஜகவின் பெரும்பான்மைவாத ஆதிக்க அரசியல்- அறிக்கையால் அலறவிட்ட தவெக தலைவர் விஜய்…