என்ன ஒரு எகத்தாளம், வன்மம்.. நீங்க தயாரிப்பாளரா இருக்க காரணமே அவருதான்.. ஞானவேல்ராஜாவை வறுத்தெடுத்த பாரதிராஜா!

Author: Udayachandran RadhaKrishnan
28 November 2023, 7:00 pm

என்ன ஒரு எகத்தாளம், வன்மம்.. நீங்க தயாரிப்பாளரா இருக்க காரணமே அவருதான்.. ஞானவேல்ராஜாவை வறுத்தெடுத்த பாரதிராஜா!

இயக்குநர் அமீருக்கும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கும் இடையேயான பிரச்னை மிக்பெரிய அளவில் சென்று கொண்டிருக்கிறது. இந்த விவகாரம் தொடர்பாக, அமீருக்கு ஆதரவாக சசிகுமார், சமுத்திரக்கனி, கரு.பழனியப்பன், பொன்வண்ணன் உள்ளிட்ட பலர் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

அந்த வகையில், இப்பொது பாரதிராஜா, தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா படைப்பாளியின் புகழ், படைப்பிற்கு களங்கம் ஏற்படுத்துவதுபோல் பேசியிருப்பது கண்டிக்கத்தக்கது. ஞானவேல் ராஜாவை தயாரிப்பாளராக உருவாக்கியதில் அமீரின் பங்களிப்பு மிகப்பெரியது என்பதை மறந்துவிட வேண்டாம். பிரச்சினையை சுமூகமாக பேசி தீர்ப்பதே சரியாக இருக்கும் என்று இயக்குனர் அமீருக்கு ஆதரவாக பாரதிராஜா அறிக்கை வெளியிட்டு உள்ளார்.

இது தொடர்பாக தனது அறிக்கையில், ஞானவேல் அவர்களே, படைப்பிற்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசியிருப்பது மிகவும் கண்டிக்கதக்கதாகும். உங்களை திரைத்துறையில் அடையாளப்படுத்தி, மிகப்பெரும் தயாரிப்பாளராக உருவாக்கியதில் அமீரின் பங்களிப்பு மிகப்பெரியது என்பதை மறந்து விட வேண்டாம்.

பருத்திவீரன் திரைப்படத்திற்கு முன்பு அமீர் இரண்டுபடம் இயக்கி,அதில் ஒன்றைத் தயாரித்தும் இருக்கிறார். அவர் உங்கள் படத்தில் தான் வேலை கற்றுக் கொண்டார் என்பதை எக்காளமாக கூறி வன்மமாக சிரிப்பது என்போன்ற படைப்பாளிகளையும் அவமதிக்கும் செயலாகும்.

ஏனென்றால் உண்மையான படைப்பாளிகள் சாகும் அவரை கற்றுக்கொண்டேதான் இருப்பார்கள், நான் இப்போதும் கற்றுக்கொண்டு தான் இருக்கிறேன். மிகச் சிறந்த படைப்பாளியின் படைப்புகளையும்,அவர் நேர்மையையும் இழிவுபடுத்தியதற்காக வருத்தம் தெரிவித்து, பிரச்சினையை சுமூகமாக பேசி தீர்ப்பதே சரியாக இருக்கும் என்று நம்புகிறேன் என்று இவ்வாறு தனது அறிக்கையில் குறிப்பிட்டு இருக்கிறார்.

  • lokesh kanagaraj movie actor sri present fitness photo shocking fans லோகேஷ் கனகராஜ் பட நடிகருக்கு இப்படி ஒரு பரிதாப நிலையா? அதிர்ச்சியில் ரசிகர்கள்…