திட்டமிட்டு அவமானப்படுத்திவிட்டு வருத்தப்படுவது ஏன்? போலியான வருத்தம்.. ஞானவேல்ராஜாவை விளாசிய சசிகுமார்!!

Author: Udayachandran RadhaKrishnan
29 November 2023, 1:18 pm

திட்டமிட்டு அவமானப்படுத்திவிட்டு வருத்தப்படுவது ஏன்? போலியான வருத்தம்.. ஞானவேல்ராஜா அறிக்கையை ஏற்க சசிகுமார் மறுப்பு!!

பருத்தி வீரன் தயாரிப்பு விஷயத்தில் ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் இயக்குநர் அமீர் மீது வைத்த எதிர்மறை கருத்து சர்ச்சையான நிலையில், இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனி ஆகியோர் அமீருக்கு ஆதரவாக பேசினர். பருத்தி வீரன் படத்தை ஞானவேல் தொடங்கிய சிறிது நாளில் கைவிட்டதாகவும், அமீர் பலரீடம் பணம் வாங்கி படத்தை முடித்ததாகவும், நானே அமீருக்கு பணம் தந்தேன் எனவும் சசிகுமார் குறிப்பிட்டிருந்தார். இதையே சமுத்திரக்கனியும் தனது நீண்ட கடிதத்தில் விளக்கமாக கூறியிருந்தார்.

அவர்களை தொடர்ந்து நடிகர்கர் பொன்வன்னன், இயக்குநர் சுதா கொங்கரா, பாரதி ராஜா என பலரும் அமீருக்கு ஆதரவாக தங்களது கருத்துகளை தொடர்ந்து வெளியிட்டு வந்தனர்.

இந்நிலையில் தயாரிப்பாளர் ஞானவேல் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், பருத்தி வீரன் பிரச்சனை கடந்த 17 ஆண்டுகளாக நடந்து கொண்டிருக்கிறது. நான் இது நாள் வரை அதை பற்றி பேசியது இல்லை. என்றைக்குமே “அமீர் அண்ணா” என்றுதான் நான் அவரை குறுப்பிடுவேன். ஆரம்பத்திலிருந்தே அவர் குடும்பத்தாருடன் நெருங்கிப்பழகியவன்.

அவரது சமீபத்திய பேட்டிகளில் என் மீது அவர் சுமத்திய பொய்யான குற்றச்சாட்டுகள் என்னை மிகவும் காயப்படுத்தியது. அதற்கு பதில் அளிக்கும் போது நான் பயன்படுத்திய சில வார்த்தைகள் அவர் மனதை புண்படுத்தி இருண்ட்தால் அதற்கு நான் மனப்பூர்வமாக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். என்னை வாழவைக்கும் சினிமா துறையையும் அதில் பணிபுரியும் அனைவரையும் மிகவும் மதிப்பவன் நான் என்று அதில் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் ஞானவேல் ராஜாவின் இந்த பதிவுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள நடிகர் சசிகுமார், போலியான வருத்தத்திற்கு உண்மையை பலி கொடுக்க முடியாது.

அமீர் அண்ணன் ஞானவேல் ராஜா மீது சுமத்திய பொய்யான குற்றச்சாட்டுகள் என்ன? நான் பயன்படுத்திய சில வார்த்தைகள் புண்படுத்தி இருந்தால் என்று குறிப்பிட்டு சொல்கிறார் ஞானவேல் ராஜா. அப்படியெனில் அந்த சில வார்த்தைகள் என்ன?

திட்டமிட்டு ஒருவரை அவமானப்படுத்திவிட்டு அவருக்கு அவரே வருந்துவது என்ன மாதிரியான வருத்தம்? இதன்மூலம் அமீர் அண்ணனுக்கு ஞானவேல் ராஜா சொல்ல வருவது என்ன? பெயரிடப்படாத கடிதம் யாருக்கு?

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 349

    0

    0