பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த ஆசிரியர் : அரசு பள்ளியில் நடந்த கொடூர சம்பவம்..!!!

Author: Udayachandran RadhaKrishnan
29 November 2023, 2:39 pm

பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த ஆசிரியர் : அரசு பள்ளியில் நடந்த கொடூர சம்பவம்..!!!

விக்கிரவாண்டி பகுதியில் செயல்படும் அரசு நடுநிலைப் பள்ளியில் புதுச்சேரி மணவெளி பகுதியைச் சோந்த ஜெ.கருணாகரன் (42) ஆசிரியராகப் பணியாற்றி வந்தாா்.

இவா், பள்ளியில் பயிலும் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகாா் தெரிவிக்கப்பட்டது. இது தொடா்பாக விழுப்புரம் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் விசாரணை நடத்தி வந்தனா்.

இதில், ஆசிரியா் கருணாகரன் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தது உறுதியானதால், விழுப்புரம் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் போக்ஸோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து, அவரைக் கைது செய்தனா்.

இந்நிலையில் இன்று காலை வழக்கம் போல் பள்ளி திறக்கப்பட்ட நிலையில் ஒரு சில மாணவர்களின் பெற்றோர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம் என்று பள்ளியின் முன்பு கூடி கூறியதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் ஆசிரியர்கள் பேச்சுவார்த்தை நடத்தி மாணவர்களை பள்ளிக்கு வரவழைத்து வழக்கம் போல் பள்ளி செயல்பட்டது.

  • Bigg Boss Love Proposalபிக் பாஸ் வீட்டில் லவ் பிரபோஸ் செய்த சௌந்தர்யா.. வைரலாகும் ப்ரோமோ!
  • Views: - 605

    0

    0