பழனியில் சாலையோர வியாபாரிகளுக்கு மிரட்டல்… வைரலான வீடியோ ; 2 ரவுடிகளை கொத்தாக தூக்கிய போலீஸார்…!!
Author: Babu Lakshmanan29 November 2023, 4:53 pm
பழனி அடிவாரம் பகுதிகளில் சாலையோர வியாபாரிகளிடம், மிரட்டல் விடுத்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலான நிலையில் பிரபல ரவுடிகள் இருவரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் உட்பட்ட கிரிவல பாதையில் கார்த்திகை, மார்கழி, தை மாதம் சீசன் நேரத்தில் சாலையோர கடைகள் அமைக்கப்பட்டு வியாபாரம் செய்து வருவது வழக்கம்.

இந்த நிலையில் அந்த பகுதிகளில் இருக்கும் பிரபல ரவுடிகளான துர்க்கை ராஜ் மற்றும் அருண் என்ற பல்வேறு கொலை மற்றும் கொலை வழக்குகள் நிலுவையில் உள்ள இவர்கள், சாலையோர வியாபாரிகளிடம் கடை போடுவது சம்பந்தமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வந்த நிலையில், இன்று காவல்துறையினர் துர்க்கை ராஜ் மற்றும் அருண் இருவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சாலையோர வியாபாரியிடம் மிரட்டல் விடுத்த வீடியோ காட்சிகளை இணையத்தில் வைரலான நிலையில், பிரபல ரவுடிகள் இருவரை கைது செய்து சிறையில் அடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.