‘நீ என்ன அரசியல்வாதியா..? கைநீட்டி பேசுற’…. அடிப்படை வசதிகளை கேட்டு வந்த பொதுமக்கள்… அதட்டிய அமைச்சர் சிவசங்கர்…!!

Author: Babu Lakshmanan
29 November 2023, 7:23 pm

பெரம்பலூர் அருகே அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி கேட்டு வந்த பொதுமக்களை அமைச்சர் சிவசங்கர் அதட்டி பேசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பெரிய வெண்மணி, கல்லை ஓலைப்பாடி, வேப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் ரேஷன் கடை அடிக்கல் நாட்டு விழா மற்றும் வேப்பூரில் முடிவுற்ற மிகவும் பிற்படுத்தப்பட்ட கல்லூரி மாணவிகள் தங்கும் விடுதி, ரேஷன் கடை திறப்பு உள்ளிட்ட நிகழ்விற்கு போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரை இன்று வருகை தந்தார்.

அப்போது, வேப்பூர் ஊராட்சிக்குட்பட்ட பொதுமக்கள் தங்களுக்கு நீண்ட காலமாக அடிப்படை வசதி கேட்டு பலமுறை மாவட்ட ஆட்சியரிடம், வட்டார வளர்ச்சி அலுவலரிடம் புகார் அளித்தும் தங்களுக்கு சுகாதாரமான குடிநீர், கழிவுநீர், வாய்க்கால் தேங்கி நிற்கும் குப்பைகள் அகற்றக்கோரி பலமுறை மனுக்கள் அளித்தும், ஓலைப்பாடி சேர்ந்த வேப்பூர் திமுக ஊராட்சி மன்ற தலைவரான பெரியசாமி எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் மிகவும் மன வேதனைக்கு ஆளாக்கி வருவதாகக் கூறி துவக்க விழாவிற்கு வந்த போக்குவரத்து துறை அமைச்சரை பொதுமக்கள் பெண்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

தங்கள் குறைகளை கூற வந்த பொதுமக்களை, அரசியல்வாதி போல் கைநீட்டி பேசி வருகிறீர்கள் என்றும், புகார் அளிக்க வந்த பொதுமக்களை வசைப்பாடி அதிகாரிகளிடம் புகார் அளித்தீர்களா..? என்றும் பொதுமக்களை பார்த்து அமைச்சர் கேள்வி எழுப்பினார். பின்னர், பொதுமக்கள் சார்பாக அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும், சுகாதாரமான குடிநீர் உள்பட அடிப்படை வசதிகளை செய்து தர எந்தவித நடவடிக்கைகளையும் அதிகாரிகள் எடுப்பதில்லை என்று புகார் தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து, நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவை போட்டு விட்டு, அங்கிருந்து உடனடியாக அமைச்சர் கிளம்பிச் சென்றார். இதற்கு தான் உங்களுக்கு வாக்களித்தோமா என்று புலம்பியபடி, மக்களும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

  • Ajith reunite Again With Adhik அஜித்துடன் மீண்டும் கூட்டணி… உருவாகும் மார்க் ஆண்டனி 2.. ஆதிக் முடிவு!!
  • Views: - 401

    0

    0