தெலங்கானாவில் ஆட்சியை பிடிக்கும் காங்கிரஸ்… ம.பி., ராஜஸ்தானில் மகுடம் சூடப்போகும் பாஜக ; 5 மாநில தேர்தலுக்கு பிந்தை கருத்துக்கணிப்பு வெளியீடு!!
Author: Babu Lakshmanan30 November 2023, 6:44 pm
5 மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகியுள்ளன.
ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களுக்கு அண்மையில் தேர்தல் நடந்து முடிந்தது. தெலங்கானா மாநிலத்திற்கு இன்று தேர்தல் நடைபெற்றது. இந்த நிலையில், 5 மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ளது.
அதன்படி, தெலங்கானாவில் பாரத் ராஷ்டிரிய சமிதி கட்சியை தோற்கடித்து காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் என தெரிய வந்துள்ளது. அதேபோல, ராஜஸ்தானில் காங்கிரஸின் ஆட்சியை அகற்றிவிட்டு பாஜக ஆட்சியமைக்கும் என தெரிய வந்துள்ளது. மத்திய பிரதேசத்தில் பாஜக மகுடம் சூடும் என கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 40 தொகுதிகளை கொண்ட மிசோரமில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காது என சொல்லப்பட்டுள்ளது.
சத்தீஸ்கரில் காங்கிரஸ், பாஜக இடையே இழுபறி நிலவும் என கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
மத்திய பிரதேசம் – REPUBLIC TV கருத்துக்கணிப்பு
மொத்தம் – 230
பெரும்பான்மை – 116
பாஜக ;118 -130
காங்கிரஸ் ; 97 -117
எஎஸ்பி ; 0
மற்றவை ; 0-2
ஜன் கி பாத் கருத்துக்கணிப்பு
ராஜஸ்தான் – 199 (200)
பெரும்பான்மை – 101
பாஜக ; 100 -122
காங்கிரஸ் ; 62 – 85
மற்றவை ; 14-15
சத்தீஸ்கர் – India TV-CNX கருத்துக்கணிப்பு
மொத்தம் – 90
பெரும்பான்மை – 46
காங்கிரஸ் ; 40-50
பாஜக ; 36-46
மற்றவை ; 1-5
தெலங்கானா – CHANAKYA STRATEGIES கருத்துக்கணிப்பு
மொத்தம் – 119
பெரும்பான்மை – 60
காங்கிரஸ் ; 67 – 78
பி.ஆர்.எஸ் ; 22 – 31
பாஜக ; 6-09
ஏ.ஐ.எம்.ஐ.எம். ; 06-07
மிசோரம் – India TV – CNX கருத்துக்கணிப்பு
மொத்தம் – 40
பெரும்பான்மை – 21
எம்.என்.எஃப். ; 14-18
Z.P.M. ; 12 -16
காங்கிரஸ் ; 8-10
பாஜக ; 0-2