புரட்சி பாரதம் நிர்வாகி கொடூரமாக வெட்டிக்கொலை… கஞ்சா போதையில் இளைஞர்கள் வெறிச்செயல்.. திருவள்ளூரில் அதிர்ச்சி சம்பவம்..!!!

Author: Babu Lakshmanan
30 November 2023, 9:40 pm

திருவள்ளூரில் புரட்சி பாரதம் நிர்வாகி கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருத்தணி அருகே உள்ள தாழவேடு பகுதியில் அமைந்துள்ள சமத்துவபுரம் நுழைவு வாயில் முன்பு புரட்சி பாரதம் கட்சியின் மேற்கு ஒன்றிய செயலாளர் அசோக் என்பவர் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த 3 பேர் கொண்ட கும்பல் அவரை சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றது. இதில் சம்பவ இடத்திலேயே அசோக் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவத்தின் போது, அதனை தடுக்க முயன்ற கலையரசன் என்பவரின் கையிலும் வெட்டிவிட்டு அந்தக் கும்பல் தப்பியோடியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த அசோக்கின் குடும்பத்தினர், அவரது சடலத்தை பார்த்து கதறி அழுதனர். அந்த சமயம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்ப முயன்ற போலீசாரை தடுத்து நிறுத்தி, கொலை செய்த நபர்களை கைது செய்த பிறகே உடலை இங்கிருந்து எடுக்க அனுமதிப்போம் என வாதிட்டனர்.

பின்னர், அவர்களை சமாதானப்படுத்தி திருத்தணி அரசு பொது மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதனிடையே, போலீசார் நடத்திய விசாரணையில், கஞ்சா போதையில் 3 இளைஞர்கள் அரிவாளால் வெட்டிக் கொலை செய்ததும், கஞ்சா விற்பது குறித்து போலீசாருக்கு, அசோக் தகவல் கொடுத்ததாலேயே வெட்டப்பட்டதாக தெரிய வந்துள்ளது.

  • Squid Game 2 Today Release timing on Netflix இன்று வெளியாகும் SQUID GAME 2…. எத்தனை எபிசோடுகள் தெரியுமா?
  • Views: - 264

    0

    0