கார்த்தியால் தான் நான் இந்த இடத்தில் இருக்கிறேன் – மேடையில் ஓப்பனாக கூறிய தமன்னா!
Author: Shree1 December 2023, 1:17 pm
தமிழ் சினிமாவில் வாரிசு குடும்பத்தில் பிறந்து வளர்ந்து முன்னணி நடிகராக மார்க்கெட் பிடித்தவர் நடிகர் கார்த்தி. இவரது நடிப்பில் கடந்த 2010ம் ஆண்டு வெளியான திரைப்படம் பையா. இப்படத்தை லிங்குசாமி இயக்கியிருந்தார். இதில் கார்த்திக்கு ஜோடியாக தமன்னா நடித்திருந்தார்.

இப்படத்தில் படத்தில் வரும் தமன்னா பெங்களூரிலிருந்து மும்பைக்கு வேலையில்லாத கார்த்தியால் ஓட்டிச் செல்லப்படுகிறார். அப்போது அவர்களைத் துரத்தும் கும்பல்களைத் தவிர்க்க வேண்டும். அந்த பயணத்தில் ஹீரோயின் மீது ஹீரோவுக்கு காதல் ஏற்பட்டு அதை எப்படி வெளிப்படுத்தினார் என கதை நகரும். இப்படத்தில் கார்த்தி , தமன்னாவின் ஜோடி மிகச்சிறப்பாக இருந்தது. அந்த படத்தில் இருவரும் உண்மையிலேயே காதலித்தார்கள். ஆனால், அவர்கள் காதலுக்கு சிவகுமார் எதிர்ப்புகள் தெரிவிக்க பிரிந்துவிட்டனர்.

அதன்பின்னர் தமன்னா, கார்த்தி இருவரும் தங்களது கெரியரில் அதிக கவனத்துடன் நடித்து உச்ச நட்சத்திரங்களாக சிறந்து விளங்கி வருகிறார்கள். இந்நிலையில் ஜப்பான் படத்தின் விழாவில் கார்த்தி குறித்து பேசிய தமன்னா. ” கார்த்தியால் தான் நான் நன்றாக தமிழ் பேசக்கற்றுக்கொண்டேன். நான் எத்தனை படத்தில் நடித்திருந்தாலும் இன்று வரை என் அடையாளமாக இருப்பது பையா. அதற்காக நான் கார்த்திக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் என அவர் பேசினார்.