என்னை இயக்குனராக மதித்த ஒரே ஒருத்தர் அவர் தான்… அட்லீ நெகிழ்ச்சி பேட்டி!

Author: Shree
1 December 2023, 2:37 pm

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் அட்லீ. இவர் ராஜா ராணி படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் அறிமுகமானார். முதல் படமே சூப்பர் ஹிட் கொடுக்க இளம் வெற்றி இயக்குனராக வலம் வந்தார். அதை தொடர்ந்து தெறி, மெர்சல், பிகில் உள்ளிட்ட தொடர் வெற்றி படங்களை இயக்கி தமிழ் சினிமாவின் டாப் இயக்குனர் என்ற இடத்தை பிடித்தார்.

atlee

அதையடுத்து அண்மையில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் வைத்து ஜவான் என்ற படத்தை இயக்கி மாபெரும் வெற்றி கண்டுள்ளார். இவர் நடிகை பிரியாவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். 8 வருடங்களுக்கு பிறகு அண்மையில் தான் இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது.

அட்லீ கடைசியாக பாலிவுட் ஸ்டார் நடிகர் ஷாருக்கானை வைத்து ஜவான் படம் இயக்கி மாபெரும் ஹிட் கொடுத்தார். அப்படத்தை தொடர்ந்து அட்லீ யாரை வைத்து படம் இயக்குவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நடிகர் கமல் ஹாசனை தான் அடுத்து இயக்க உள்ளாராம். அவருடன் சேர்ந்து ஷாருக்கானும் நடிக்கவுள்ளார் என தகவல் கிடைத்துள்ளது. ஹேராம் படத்திற்கு பிறகு இவர்கள் இருவரும் சேர்ந்து நடிக்க உள்ளதால் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் அட்லீ, விஜய் குறித்தும் அவருடனான திரைப்பயணம் குறித்தும் பேசினார். அப்போது ” நான் ராஜா ராணி படத்தை இயக்கி முடித்ததும் விஜய் அண்ணன் அவராகவே என்னை அழைத்து நம்ம ஒரு படம் பண்ணலாம் என வாய்ப்பு கொடுத்தார். மேலும் என்னுடைய வேலையை பாராட்டி என்னை ஒரு இயக்குனராக முதலில் மதித்தது விஜய் அண்ணன் மட்டும் தான் என பெருமிதத்தோடு பேசினார் அட்லீ.

  • good bad ugly movie special screening for ladies பெண்களுக்கு மட்டுமே திரையிடப்படும் குட் பேட் அக்லி திரைப்படம்! அதிரடி காட்டிய பிரபல திரையரங்கம்…