அமலாக்கத்துறை அடிக்கும் கொள்ளையில் பாஜகவுக்கு பங்கு… அண்ணாமலையின் சொத்து திடீரென உயர்ந்தது எப்படி..? எம்பி ஜோதிமணி கேள்வி
Author: Babu Lakshmanan2 December 2023, 10:17 am
முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கருக்கும், அண்ணாமலைக்கும் உள்ள தொடர்பின் காரணமாகவே ஆளுநர் எம் ஆர் விஜயபாஸ்கரின் ஊழல் குற்றச்சாட்டுக்கு விசாரணை செய்ய ஒப்புதல் வழங்கவில்லை என்று கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி குற்றம்சாட்டியுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வளர்ச்சி மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நடைபெற்றது இதில் கலந்துகொண்ட கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி செய்தியாளர்களிடம் பேசியதாவது :-
ED, IT இவர்கள் எல்லாம் பாஜவின் கூட்டணி தான். தமிழகத்தில் 20 லட்சம் லஞ்சம் வாங்கிய ED அதிகாரிகள் பிடிபட்டுள்ளனர், ED அடிக்கும் கொள்ளையில் பாஜகவின் எவ்வளது பங்கு வாங்குகிறது.
தமிழகத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர்களின் வீட்டுக்கு அமலாக்கத்துறை ஏன் போகவில்லை. ED அடிக்கும் கொள்ளையில் பாஜகவிற்கு பங்கு உள்ளது. பாஜக அடிக்கும் கொள்ளையில் ED பங்கு உள்ளது. அண்ணாமலை நேர்மையற்ற காவல்துறை அதிகாரி. கர்நாடகவில் குதிரை பேர ஆட்சிக்கு அவர் துணைபோனார் என்ற குற்றச்சாட்டு உள்ளது.
வசூல் யாத்திரை தான் நடத்துகிறார். எம்எஸ்எம்இ நிறுவனம் தொழில் அதிபர்களை மிரட்டி பணம் வசூல் செய்கிறது. அதில் சம பங்கு அண்ணாமலைக்கு போகிறது. அண்ணாமலையின் தற்போதை சொத்து மதிப்பு எவ்வளது, இவ்வளது சொத்து மதிப்பு அவருக்கு எப்படி வந்தது என்பதை அவர் விளக்க வேண்டும். தமிழகத்தில் நோட்டாவிற்கு கீழ் வாக்கு வாங்கும் அண்ணாமலை, திமுக, காங்கிரஸ் கூட்டணியை பற்றி கவலைப்பட வேண்டாம்.
கரூர் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் அதிமுக அமைச்சர் வருமானத்தை விட 55 சதவீதம் கூடுதலாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. தென்னிந்திய லாரி உரிமையாளர்கள் சங்கம் 1500 கோடி ஊழல் குற்றம் சாட்டியுள்ளது.
கரூர் மாவட்டத்தை பொருத்தவரையில் முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம்ஆர். விஜயபாஸ்கருக்கும், பாஜக தலைவர் அண்ணாமலைக்கும் ரகசிய தொடர்பு இருப்பதன் காரணமாக தான் அவரது வழக்கை விசாரணைக்கு வரவிடாமல் ஆளுநர் பார்த்துக் கொள்கிறார். எம்ஆர் விஜயபாஸ்கர் அடித்த கொள்ளையில் பாஜக தலைவர் அண்ணாமலைக்கு பங்கு எவ்வளவு செல்கிறது என்று தெரியவில்லை,
செந்தில்பாலாஜி வழக்கை பொருத்தவரையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு குற்றப் பத்தரிக்கை தாக்கல் செய்துள்ளது. குற்றப்பத்தரிக்கை தாக்கல் செய்த பிறகு ஜாமீன் கொடுக்காலம். அது செந்தில் பாலாஜி என்று இல்லை. சட்டப்படி யாருக்கு வேண்டுமானாலும் விசாரணைக்கு பின்பு ஜாமீன் கொடுத்திருக்க வேண்டும்.
ஆனால், EDயை பொறுத்தவரையில் பாஜவிற்கு அடிபணியாமல் இருந்தால், எந்த அளவிற்கு முடியுதோ அந்த அளவிற்கு நெருக்கடி கொடுத்து வருகின்றனர்.
இந்தியாவிலேயே ஜிஎஸ்டி வரி என்பது தமிழகத்தில் இருந்து தான் மத்திய அரசுக்கு கிடைக்கிறது. ஆனால் மற்ற மாநிலங்களை விட தமிழக அரசுக்கு ஜிஎஸ்டி நிலுவை தொகை குறைத்து வழங்கப்படுகிறது. காங்கிரஸ் ஆட்சி காலத்தில் தேர்தல் பத்திரம் கொண்டு வரும் போது எந்த நிறுவனத்தில் இருந்து பங்குகள் வாங்கப்பட்டுள்ளது என்பது குறித்து தெளிவாக குறிப்பிடப்பட்டு வெளியிடப்படும். ஆனால், தற்போதைய பாஜக அரசில் இது போன்ற நிலை இல்லை. இதனால்தான் தேர்தல் பத்திரங்கள் மூலமாக பாஜக கொள்ளையடிக்கிறது
100 நாள் வேலை திட்டத்தில் முறையான கூலி மத்திய அரசிடம் இருந்து கிடைப்பது கிடையாது நிதியையும் மத்திய அரசு குறைத்துவிட்டது மேலும் 100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்றும் கூலி தொழிலாளர்களுக்கு வீடு வேணும் என்று அவர்கள் கேட்கிறார்கள். ஆனால் இதுவரை அவர்களுக்கு வீடு வழங்கப்படவில்லை
பாஜக எவ்வளவு தூரம் கொள்ளை அடித்துள்ளது என்று சிஏஜி அறிக்கை தெளிவாக குறிப்பிட்டுள்ளது. கடந்த காங்கிரஸ் ஆட்சி காலத்தில் 2ஜி குற்றச்சாட்டு எழுந்தபோது, ஜேபிசி அதன் மூலமாக தான் நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் தற்போது நாங்கள் பாஜக அரசு மீது சிஐடி கூறிய குற்றச்சாட்டிற்கு ஜேபிசி வேண்டும் என்று கேட்கிறோம். இதுவரை மத்திய அரசு அனுமதி அளிக்கவில்லை, என தெரிவித்துள்ளார்.