தமிழக அரசு நடத்தும் கார் பந்தயத்தில் அண்ணாமலைக்கும் தொடர்பு? திமுகவுடன் பாஜக ரகசிய கூட்டணி : சி.வி. சண்முகம் பகீர்!!

Author: Udayachandran RadhaKrishnan
2 December 2023, 1:30 pm

தமிழக அரசு நடத்தும் கார் பந்தயத்தில் அண்ணாமலைக்கும் தொடர்பு? திமுகவுடன் பாஜக ரகசிய கூட்டணி : சிவி சண்முகம் பகீர்!!

விழுப்புரம் அதிமுக மாவட்ட தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த மாநிலங்களவை உறுப்பினர் சிவி சண்முகம் சென்னை மாநகரம் வரலாறு காணாத மழையினால் தத்தளித்து கொண்டிருப்பதாகவும் 4 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மழைநீர் வடிகால் பணி நடைபெற்று கொண்டிருக்க நிலையில் இன்னும் மூன்று கிலோ மீட்டர் மட்டுமே பணிகள் நிறைவடைய உள்ளதாக தெரிவித்த நிலையில் சென்னை மழையினால் தத்தளிப்பதாகவும் சாலைகள் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் மழை நீர் தேங்கியுள்ளதாக கூறினார்.

மழை நீரை பாதிப்பினை கவனிக்க வேண்டிய முதலமைச்சரும் அமைச்சரும் இன்றைக்கு 8 ஆம் தேதி கார்பந்தய போட்டி நடத்துவதற்காக கவனம் செலுத்தி வருவதாக குற்றஞ்சாட்டினார்.

கார்பந்தயத்திற்காக 242 கோடி ரூபாய்க்கு செலவு செய்து திமுக அரசு கார் பந்தயம் நடத்துவதாகவும் இது தொடர்பாக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மட்டுமே கண்டனம் தெரிவித்துள்ளதாகவும் மற்ற கட்சியினர் மெளனம் காத்து வருவதாக கூறினார்.

இதில் பாஜகவிற்கு திமுகவிற்கும் ரகசிய உறவு உள்ளதால் இது தொடர்பாக அண்ணாமலை வாய்திறக்காமல் உள்ளதாகவும், கார்பந்தயத்திற்காக மத்திய அரசு சார்பில் 24 மணி நேரத்திற்குள் அனுமதி வழங்கபட்டுள்ளதாகவும் திமுக அரசு ஒரு விளம்பர அரசாக உள்ளதாக தெரிவித்தார்.

காஞ்சிபுரத்தில் தண்ணீர் தொட்டியில் மலம் கலந்ததாக கொடுக்கப்பட்ட புகாரில் அம்மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்காமல் மறைத்துள்ளதாகவும், நீலகிரியில் சிறுமி பாலியல் வன்கொடுமை ஆனதையடுத்து சிறுமிக்கு கைவிலங்கு போட்டு நீதிமன்றத்திற்கு அழைத்து சென்ற அவல நிலை திமுக ஆட்சியில் ஏற்பட்டுள்ளதாக கூறினார்.

கார்பந்தயத்திற்காக தமிழக அரசு 242 கோடி செலவு செய்துள்ளது குறித்து முதல்வர் விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் ஆவினில் மேஜிக் பாலை நிறுத்திவிட்டு சொகுசு வாழ்க்கையை தமிழக அரசு நடத்தி உள்ளதாகவும் தமிழகத்தில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை மத்திய அரசாங்கத்தில் பணியாற்றுகின்றவர்கள் தாக்கபடுகின்ற சம்பவமும் இங்கு நடைபெறுவதாக தெரிவித்தார்.

அமலாக்க துறையின் மூலமாக தமிழகத்தில் மணல் குவாரியில் ஊழல் நடைபெற்று கொண்டிருப்பதை வெளிகொண்டு வந்து மணல் கொள்ளையில் 420 கோடி அளவிற்கு ஊழல் நடைபெற்றிருப்பதை வெளி கொண்டு வந்துள்ளதற்கு நீதிமன்றமே பாராட்டு தெரிவித்துள்ளதாகவும், அமலாக்க துறை அதிகாரி லஞ்சம் பெற்றுருப்பதாக தெரிவிப்பது அதிகாரி குற்றம் செய்திருந்தால் நடவடிக்கை எடுக்கலாம் ஆனால் இரவில் அவர் கைது செய்யப்பட்டிருப்பதால் சந்தேகம் எழுவதாக கூறினார்.

மணல் குவாரியில் முறைகேடு நடைபெற்று இருப்பது குறித்து அமலாக்க துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகிற நிலையில் எந்த ஆண்டிலிருந்து எந்த ஆண்டு வரை ஊழல் நடைப்பெற்றது என்பது குறித்து அமலாக்க துறையினர் கணக்கெடுப்பதை பொறுத்தே தெரியும் அது அதிமுக ஆட்சியில் மணல் எடுக்கப்பட்டது குறித்து கணக்கெடுத்து விசாரனை செய்தாலும் அதனை எதிர்கொள்ள நாங்கள் தயாராக உள்ளதாகவும் தமிழகத்தில் மெச்சூரிட்டி இல்லாத ஒரே அரசியல் வாதி பாஜக தலைவர் அண்னணாமலை தான் பகிரங்கமாக தெரிவித்தார்.

  • Rafael Nadal retirement reaction by Dhanush ஓய்வு அறிவிப்பு.. நடிகர் தனுஷின் உருக்கமான பதிவு..
  • Views: - 577

    0

    0